Asianet News TamilAsianet News Tamil

அஜித்தின் வலிமைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்னங்க சம்பந்தம்..? போனிகபூர் போட்டுடைத்த ரகசியம்..!

மாஸ்கோவிலிருந்து 300 மைல் தொலைவில் ஒரு இடத்தில் காட்சியை படமாக்கினோம். செட்டில் அஜித்தை வாழ்த்த அந்த சிறிய நகரத்திலிருந்து பல உள்ளூர்வாசிகள் வந்தார்கள்.

What has Ajith's valimai got to do with Edappadi Palanisamy? Boney Kapoor  secret ..!
Author
Tamil Nadu, First Published Sep 30, 2021, 12:47 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலியை இணைப்பது எது? இப்படிப்பட்ட கதைதான் வலிமை படத்தின் மையக்கருவும் என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர், ‘பைக் ஸ்டண்ட் காட்சியை ஆறு நாட்களாக தொடர்ந்து படமாக்கினோம். அதற்காக நாங்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தோம். அஜித் அந்தக் காட்சிகளை எடுக்க மிகவும் உற்சாகமாக இருந்தார். அதன் தரத்தில் நாங்கள் சமரசம் செய்ய விரும்பவில்லை. நாங்கள் ரஷ்யாவிலிருந்து சிறந்த ஸ்டன்ட் கலைஞர்களை ஒன்றிணைத்தோம். மாஸ்கோவிலிருந்து 300 மைல் தொலைவில் ஒரு இடத்தில் காட்சியை படமாக்கினோம். செட்டில் அஜித்தை வாழ்த்த அந்த சிறிய நகரத்திலிருந்து பல உள்ளூர்வாசிகள் வந்தார்கள்.

What has Ajith's valimai got to do with Edappadi Palanisamy? Boney Kapoor  secret ..!

ரசிகர்கள் அஜித்தை அதிகம் நேசிப்பதால், அப்டேட்களைக் கேட்கும் உரிமை அவர்களுக்கு உள்ளது. எனினும், நான் அவர்களை தவறாக வழிநடத்த விரும்பவில்லை. கையில் ஏதாவது வலுவான இருப்பு இருக்கும்போது மட்டுமே நான் அதைப்பற்றி வெளியிட விரும்பினேன். பெரும்பாலான காட்சிகள் ஒரு வருடத்திற்கு முன்பு ஷூட்டிங் நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சண்டைக் காட்சியை முடிக்க நாங்கள் பொறுமையாக காத்திருக்க வேண்டியிருந்தது. நான் எப்போதும் இயக்குநர்களின் தயாரிப்பாளராக இருந்தேன்.What has Ajith's valimai got to do with Edappadi Palanisamy? Boney Kapoor  secret ..!

2022 பொங்கலுக்கு விஜய்யின் பீஸ்ட் வெளியாகும் வாய்ப்புகள் உள்ளன. அது நடந்தால், தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய் பாக்ஸ் ஆபிஸில் மோதுவார்கள். அது நடந்தால், இரு நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் பொங்கல் பிரகாசமாக இருக்கும்’’ என அவர் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios