Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளுவர் என்ன திமுக உறுப்பினரா.? அதிமுகவை வச்சு செய்த அமைச்சர் ஏ.வ.வேலு.

தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளுவர்கோட்டம். தமிழரின் அடையாளமும் வள்ளுவர் தான். வள்ளுவரின் திருக்குறளை கூட உலக பொதுமறை என்று தான் கூறுகிறோம். ஆனால் முன்னாள் ஆட்சியில் , சுமார் 10ஆண்டுகளாக  வள்ளுவர் கோட்டம் பராபரிக்காமல், சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.

What DMK member is Thiruvalluvar? Minister A.V.Velu who Attack the AIADMK.
Author
Chennai, First Published Jul 2, 2021, 1:01 PM IST

அதிமுகவிற்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை. திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என்றே நினைத்து கொள்கின்றனர் என அமைச்சர் எ.வ.வேலு சாடியுள்ளார். வள்ளுவர்கோட்டத்தை புனரமைத்து சீரமைப்பது தொடர்பாக தமிழ்நாடு நெடுஞ்சாலை மற்றும் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறையின் முதன்மைச் செயலாளர் சந்தீப்சக்சேனா உட்பட அதிகாரிகளும் உடன் இருந்தனர். 

What DMK member is Thiruvalluvar? Minister A.V.Velu who Attack the AIADMK.

வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவாரூர் தேர், பொது அரங்கம், மேல்தளம் உட்பட முழுவதையும் சுற்றி ஆய்வு செய்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு,வள்ளுவர் கோட்டம் பராமரிப்பின்றி சீர் கெட்டுள்ளதால், அதனை நேரடியாக ஆய்வு செய்து சீரமைக்குமாறு முதல்வர் ஆணையிட்டிருந்தார். தமிழ் பண்பாட்டின் அடையாளமாக இருப்பது தான் வள்ளுவர்கோட்டம். தமிழரின் அடையாளமும் வள்ளுவர் தான். வள்ளுவரின் திருக்குறளை கூட உலக பொதுமறை என்று தான் கூறுகிறோம். ஆனால் முன்னாள் ஆட்சியில் , சுமார் 10ஆண்டுகளாக  வள்ளுவர் கோட்டம் பராபரிக்காமல், சீர்கெட்டுள்ளது என குற்றம் சாட்டினார். 

What DMK member is Thiruvalluvar? Minister A.V.Velu who Attack the AIADMK.

அதிமுகவிற்கு வள்ளுவர் என்றாலே பிடிப்பதில்லை, திருவள்ளுவரை திமுக உறுப்பினர் என நினைத்துக்கொண்டு தொடர்ந்து புறக்கணித்தனர், சமர்சீர் பாட புத்தகத்தில் இருந்தும் வள்ளுவர் படத்தை நீக்கினர் என அமைச்சர் வேலு சாடினார். தொடர்ந்து பேசிய அவர், வள்ளுவர் கோட்ட அரங்கத்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளது, மின்பழுதுகள் சரிசெய்து வண்ணம் பூசி, நூலகம் அமைக்க திட்டமிட்டுள்ளதாக கூறினார். இவற்றையெல்லாம் முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று நிதிஆதாரம் திட்டமிட்டு விரைவில் வள்ளுவர்கோட்டம் புனரமைக்கப்படும் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். 

 

Follow Us:
Download App:
  • android
  • ios