Asianet News TamilAsianet News Tamil

பக்கத்து நாடுகள் அனைத்தையும் பகைத்துக்கொண்டால் என்ன செய்ய முடியும்..? திமுக எம்.பி., டி.ஆர்.பாலு கேள்வி..!

ஆப்கானில் 20 ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்ட திட்டங்களின் நிலை என்ன? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார்.

What can be done if all the neighboring countries hate ..? DMK MP, TR Balu question ..!
Author
Tamil Nadu, First Published Aug 26, 2021, 4:16 PM IST

அண்டைநாடுகள் அனைத்துடனும் பகைமை எனில் என்ன செய்ய முடியும்? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து விவாதிக்கவும் விவரங்களை தெரிவிக்கவும், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு வெளியுறவு அமைச்சகம் அழைப்பு விடுத்திருந்தது. அதில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்டோர் அரசு சார்பில் பங்கேற்றனர்.What can be done if all the neighboring countries hate ..? DMK MP, TR Balu question ..!

ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு, தலிபான்களின் எழுச்சியால் எதிர்கொள்ள வாய்ப்புள்ள பிரச்னைகள், மீட்பு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் ஹர்ஷ் சிங்ளா விளக்கினார். அதன்பின் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளின் கேள்விகளுக்கு அவர் பதிளித்தார். இக்கூட்டத்தில் திமுக சார்பில் திருச்சி சிவா, டிஆர் பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.What can be done if all the neighboring countries hate ..? DMK MP, TR Balu question ..!

அப்போது பேசிய திமுக எம்.பி டி.ஆர்.பாலு, ’’ஆப்கானில் 20 ஆண்டுகளாக இந்தியா மேற்கொண்ட திட்டங்களின் நிலை என்ன? என்று டி.ஆர்.பாலு கேள்வி எழுப்பினார். அதற்கு, ஆப்கான் விவகாரத்தில் ஒவ்வொரு அடியையும் பார்த்து பார்த்து வைப்பதாக மத்திய அரசு கூறியது. அதனையடுத்து, பயங்கரவாதிகளின் மையமாக ஆப்கான் மாறிவிடக்கூடாது என டி.ஆர்.பாலு தெரிவித்திருக்கிறார். இதனிடையே ஆப்கானிஸ்தானில் இந்தியர்களை மீட்கும் பணி மிகவும் சவாலாக இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்திருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios