What can be done by Kamal Haasan Director Thankabatchan questioned!

நடிகர் கமல் ஹாசன், விவசாயிகளைக் காப்பாற்றி விடுவாரா என்று இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மக்கள் பாதை அமைப்பின் கலப்பை திட்ட துவக்க விழா சென்னை, விருகம்பாக்கத்தில் உள்ள மக்கள் பாதை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான், சகாயம் ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் தங்கர்பச்சான் பேசும்போது, மக்கள் தங்களுக்கான தலைவர்களை தேடிக் கொண்டிருப்பதாகவும், அதனால்தான் கண்டவன் காலில் போய் விழுகிறார்கள் என்றும் கூறினார். 

சகாயம் ஐ.ஏ.எஸ்., பின்னால் வருவதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறிய தங்கர்பச்சான், சகாயம் அரசியலுக்கு வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

கமல் ஹாசன், பி.ஆர். பாண்டியன் சந்திப்பு குறித்து பேசிய தங்கர்பச்சான், கமல் ஹாசன் விவசாயிகளை காப்பாற்றி விடுவாரா என்றும் இயக்குநர் தங்கர்பச்சான் கேள்வி எழுப்பினார்.