நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் கூறியதுபோல் பா.ஜனதா கூட்டணி 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலைப் பெற்றுள்ளது. தற்போது பாஜக கூட்டணி 345 இடங்களைப் பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தைப் பொறுத்தவரை தேர்தல் பிரசாரத்தின்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் பாஜக தலைவர்களான அமித் ஷா, பிரதமர் மோடிக்கும் இடையில் கடுமையான வார்த்தை போர் நடைபெற்றன.

இந்நிலையில் கடந்த முறை 2 இடங்கள் மட்டுமே பிடித்திருந்த பாஜக இரட்டை இலக்க இடங்களை பிடிக்க தீவிரம் காட்டியது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து பா.ஜனதா கடும் சவாலாக விளங்கியது.

அந்த மாநிலத்தில்  உள்ள 42 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜனதா முன்னிலைப் பெற்றுள்ளது. கடந்த முறை 34 இடங்கள் பிடித்திருந்த திரிணாமுல் காங்கிரஸ் 23 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளது.

கடந்த காலங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் சிபிஎம் கட்சிக்கும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் பெரும் மோதல் நிகழும் அண்ணைமக்காலமாக இது டிஎம்சி – பிஜேபி மோதலாக மாறியுள்ளது. இதன் உச்சக்கட்டமாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினரின் அராஜகம் அதிகமாகிவிட்டதால் சிபிஎம் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூட இம்முறை பாஜகவுக்கு வாக்களித்தாக கூறப்படுகிறது.

எது எப்படியோ 2 இடங்களைப் பெற்றிருந்த பாஜக இந்த தேர்தலில் 18 இடங்களைப் பிடித்து சாதனை படைத்துள்ளது என்றே கூறிவேண்டும்.