Asianet News TamilAsianet News Tamil

கேப்டன் விஜயகாந்த் திட்டத்தை காப்பி அடித்த ‘மம்தா பானர்ஜி’ - வீடு தேடி ரேஷன் திட்டம் தொடக்கம் ’

 

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேப்டன் விஜயகாந்த்தின் திட்டமான ‘வீடு தேடி ரேஷன்’ திட்டத்தை தொடங்கி உள்ளார்.

 

West bengal cm mamata banerjee start a scheme in ration things send to people houses
Author
West Bengal, First Published Nov 17, 2021, 12:51 PM IST

 

மேற்கு வங்காளத்தில் இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மாபெரும்  வெற்றி பெற்றது. ஆட்சி அமைத்த பின், வாக்குறுதி கொடுத்த திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக செயல்படுத்தி வருகிறார் மம்தா பானர்ஜி.

West bengal cm mamata banerjee start a scheme in ration things send to people houses

இந்நிலையில் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘துவரே ரேஷன்’ திட்டத்தை தொடங்கி உள்ளார். துவரே ரேஷன் திட்டம் என்பது நம் கேப்டன் விஜகாந்த்தின் வாக்குறுதிகளில் ஒன்றான பொதுமக்களின் வீடு தேடி சென்று, ரேஷன் பொருள் விநியோகிக்கும் திட்டம் ஆகும். இந்த திட்டத்தினையே தற்போது ‘துவரே ரேஷன்’ என்ற பெயரில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தொடங்கி இருக்கிறார்.

West bengal cm mamata banerjee start a scheme in ration things send to people houses

கடந்த செப்டம்பர் மாதம்  சுமார் 3 ஆயிரம் ரேஷன் பணியாளர்கள் மூலம் சிறிய அளவில் துவரே ரேஷன் திட்டத்தை செயல்படுத்தியது மேற்கு வங்க அரசு. மக்கள் மத்தியில் இத்திட்டத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இத்திட்டத்தால் 10 கோடிக்கும் அதிகமானோர் பயனடைவார்கள் என்றும், நாட்டிலேயே இது ஒரு முன்னோடியான திட்டமாக இருக்கும் என்றும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். 





 

Follow Us:
Download App:
  • android
  • ios