Asianet News TamilAsianet News Tamil

டாஸ்மாக் செல்வோருக்கு செம ஆப்பு... அமைச்சர் மா.சு., வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
 

Wedge for Tasmac visitors ... Minister M.S., shocking information released
Author
Tamil Nadu, First Published Nov 28, 2021, 1:21 PM IST

டாஸ்மாக் செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயமாக்கப்படும் என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.'

Wedge for Tasmac visitors ... Minister M.S., shocking information released

இதுகுறித்து பேசிய அவர், ‘’பொது இடங்களுக்கு வருவோருக்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவுறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா முதல் அலையை விட 2வது பெரும் பாதிப்பு மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, தமிழக அரசு எடுத்த அதிரடி நடவடிக்கையால் கொரோனா பெருமளவு குறைக்கப்பட்டது.Wedge for Tasmac visitors ... Minister M.S., shocking information released

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது வாரம் இரண்டு முறை தடுப்பூசி முகாம்கள் நடத்துவதற்கு அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே பொது இடங்களில் அனுமதி என்று தமிழக பொதுசுகாதார சட்டத்தில் திருத்தம் செய்து கடந்த 19ம் தேதி ஆணை வெளியிடப்பட்டது. அதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என  பள்ளிகள், கல்லூரிகள், கடைகள், சந்தைகள் மற்றும் தெருக்களில் உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடை ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.Wedge for Tasmac visitors ... Minister M.S., shocking information released

மக்கள் கூடும் இடங்களில் அதிகாரிகள் உறுதி செய்வது அவசியம். இதனைப் போலவே திரையரங்குகள், இதர பொழுதுபோக்கு இடங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் உறுதி செய்யப்பட வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு செல்வோருக்கும் தடுப்பூசி கட்டாயப்படுத்த மாவட்ட ஆட்சியர் மூலமாக அறிவுறுத்தப்படும்'’ என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios