Asianet News TamilAsianet News Tamil

அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் அடித்து ஊற்றப்போகுதாம். குறிப்பா இந்த மாவட்ட மக்கள் எச்சரிக்கையாக இருங்க.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்

We will beat and pour in Tamil Nadu for the next 4 days. Be especially wary of the people of this district.
Author
Chennai, First Published Oct 5, 2021, 12:38 PM IST

தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோர பகுதிகளில் (5.8 கிலோமீட்டர் உயரம்வரை) நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 05.10.2021: அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, சேலம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கன மழையும், தென் மாவட்டங்கள், டெல்டா (தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை) மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்டை,  நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெருமபாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான  மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 We will beat and pour in Tamil Nadu for the next 4 days. Be especially wary of the people of this district.

மேலும், 06.10.2021: நீலகிரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், தேனி, திண்டுக்கல், கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான  மழையும் பெய்யக்கூடும்.

இதையும் படியுங்கள்: இரவெல்லாம் வச்சு செய்த மழை.. பகலிலும் தொடர்கிறது.. உற்சாகத்தில் சென்னை, புறநகர் மக்கள்.

07.10.2021:  வட மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய கூடும். 08.10.2021:  மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய கூடும். 

09.10.2021: வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் மற்றும்  காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், வட மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும், தென் மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழையும் பெய்ய கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக  மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் பெருமபாலான பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும் அவ்வப்போது கன மழையும் பெய்யக்கூடும்.

We will beat and pour in Tamil Nadu for the next 4 days. Be especially wary of the people of this district.

இதையும் படியுங்கள்: தமிழகமே அதிர்ச்சி.. முதல்வர் ஸ்டாலின் வீட்டின் முன்பு தீக்குளித்து, சிகிச்சை பெற்றுவந்த நபர் உயிரிழப்பு.

மீனவர்களுக்கான எச்சரிக்கை: 

வங்கக் கடல் பகுதிகள் 05.10.2021 : தமிழக  கடற்கரை ஒட்டிய தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 08.10.2021: மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios