We lost one of the three mothers! Still refuses to believe it! Kirusnapiriya!

சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகளான கிருஷ்ணபிரியா, தனது பேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். தனது வளைகாப்பு நிகழ்ச்சியின்போது, ஜெயலலிதா வளையல் அணிவிக்கும் புகைப்படங்களை அதில் பதிவிட்டுள்ளார் கிருஷ்ணபிரியா.

இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் கார்டனில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு, ஜெயலலிதா ஆடம்பரம் இல்லாமல் எளிதான சேலையில், நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரை நோக்கி கிருஷ்ணபிரியா வருவது போன்று புகைப்படம் ஒன்று உள்ளது. 

இதன் பின்னர் கிருஷ்ணபிரியாவுக்கு ஜெயலலிதாவும், சசிகலாவும் மாலை அணிவிக்கின்றனர். பின்னர், ஜெயலலிதா, கிருஷ்ணபிரியாவுக்கு மலர்களை தூ’வி ஆசிர்வாதம் செய்யும் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது. விழாவின்போது, கிருஷ்ணபிரியாவை ஜெயலலிதா வாழ்த்தி, வளையல் அணிவிக்கிறார்.

இந்த புகைப்படங்களை கிருஷ்ணபிரியா தற்போது, தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கிருஷ்ணபிரியாவுக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்.

இதன் பின் ஜெயலலிதா, கிருஷ்ணபிரியாவுக்கு பூ தூவி ஆசிர்வதித்து வளையல் அணிவிக்கிறார். தனது வளைகாப்பு நிகழ்ச்சியை நினைவு கூறும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கிருஷ்ணபிரியா.

புகைப்படங்களுக்கு முன்பாக, 2005 ஆம் ஆண்டு அம்மா அவர்கள் போயஸ் இல்லத்தில், எனது வளைகாப்பு நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சில நினைவுகள் நம் மரணம் வரை கூடவே பயணிக்கும். அவைகளுள் இதுவும் ஒன்று என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

எங்களது மூன்று அன்னைகளில் ஒருவரை நாங்கள் இழந்துவிட்டோம் என்ற உண்மையை இன்னமும் எங்களின் மனம் நம்ப மறுக்கிறது. எனக்கு வளைப்பூட்டும்போது, அம்மா அவர்கள் பாடிய என்ன தவம் செய்தனை யசோதா என்ற கிருஷ்ணனுக்கு யசோதை பாடிய பாடலை, சற்றும் எதிர்பாராத நேரத்தில் பாடியது இன்னமும் என் இதயத்தில் ஒலித்துக் கொண்டிருப்பதாக கிருஷ்ணபிரியா அதில் குறிப்பிட்டுள்ளார்.