we lost one girl because of government laziness on neet says judge

நீட் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் விவகாரத்தில் அரசு காலம் தாழ்த்தியதால் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் வேதனை தெரிவித்தார். 

நீட் தேர்வு பயிற்சி மையங்கள் குறித்தும் தெரிவித்த நீதிபதி, தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்தார். நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிடம் அமைச்சர் பேசக் கூடாது என்று கூறிய நீதிபதி கிருபாகரன், ஆகஸ்ட் மாதம் உத்தரவு பிறப்பித்தும் வல்லுநர் குழு அமைக்க ஏன் தாமதம் ஆனது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும், வல்லுநர் குழு அமைக்க ஒரு மணி நேரம் போதாதா என்று கேட்ட நீதிபதி கிருபாகரன், நீட் பயிற்சி மையங்கள், தேர்வு ஆலோசனைக் குழு தொடர்பாக வரும் 6ஆம் தேதிக்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார்.

அரசு காலம் தாழ்த்தியதால்தான் ஒரு உயிரை இழந்துள்ளோம் என்று வேதனை தெரிவித்த அவர், மாணவர்களை நம்ப வைத்து ஏமாற்றாதீர் என்று அரசுக்கு அறிவுறுத்தினார்.