Asianet News TamilAsianet News Tamil

பொதுத்தேர்வைத் தடுக்க உயிரைக் கொடுப்போம்... கே.எஸ். அழகிரியின் அதிரடி அறிவிப்பு!

துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.  நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மட்டுமல்ல, எந்த விருதைக் கொடுத்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சி அதை வரவேற்கும். என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 
 

We ll fight against general exam for 5, 8th calss - says K.S.Alagiri
Author
Chennai, First Published Nov 3, 2019, 2:54 PM IST

மாணவர்களை பாதிக்கும் பொதுத்தேர்வை அதிமுக அரசு செயல்படுத்தினால்  உயிரை கொடுத்தாவது தடுப்போம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.We ll fight against general exam for 5, 8th calss - says K.S.Alagiri
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை மீனம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். “தமிழக அரசு புதிய கல்வி கொள்கை என்ற வார்த்தையை வைத்து ஏழைத் தொழிலாளிகளின் பிள்ளைகள் படிப்பதை தடுக்க நினைக்கிறது. கூலி தொழிலாளியின் பிள்ளைகளுக்கு 5, 8, 10, 11, 12 ஆகிய வகுப்புகளில் பொதுத்தேர்வை நடத்திவிட்டு, நீட் என்ற தேர்வை வைத்தால் மீண்டும் குலத்தொழிலைதான் செய்ய வேண்டிவரும். மாணவர்களை பாதிக்கும் இந்தப் பொதுத்தேர்வை அதிமுக அரசு செயல்படுத்தினால், அதை  உயிரை கொடுத்தாவது தடுப்போம்.

 We ll fight against general exam for 5, 8th calss - says K.S.Alagiri
நீட் தேர்வை காங்கிரஸ், திமுகதான் கொண்டு வந்ததாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அப்படியானால் அதை  நீங்கள் நீக்க வேண்டியதுதானே. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீதான குண்டர் சட்டத்தை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இந்த வழக்கிலிருந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை  ஆவது மன்னிக்க முடியாத குற்றம். மருத்துவர்கள் போராட்டம் நடத்தினாலும் மருத்துவமனைகளை செயல்பட வைத்தனர். ஜனநாயகத்தில் போராடுகிற உரிமை எல்லோருக்கும் உள்ளது. அதை ஒடுக்க முயல்வது மிகவும் கண்டிக்கத்தக்கது.

We ll fight against general exam for 5, 8th calss - says K.S.Alagiri
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மேற்கொள்ள உள்ள வெளிநாட்டு பயணத்துக்கு என்னுடைய வாழ்த்துகள்.  நடிகர் ரஜினிகாந்துக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது மட்டுமல்ல, எந்த விருதைக் கொடுத்தாலும் தமிழக காங்கிரஸ் கட்சி அதை வரவேற்கும்.” என்று கே.எஸ். அழகிரி தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios