we do not have any connection with ttvdinakaran
டெல்லியில் கைது செய்யப்பட்ட டி.டி.வி.தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அவரை நாங்கள் ஒதுக்கி வைத்துவிட்டோம் என்றும் அமைச்சர் சி.வி.கண்முகம் தெரிவித்தார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தபிறகு, அதிமுக மீண்டும் இணைவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு டி.டி.வி.தினகரனும் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதன் முதல் கட்டமாக ஓபிஎஸ் அணியினரின் கோரிக்கைகளை ஏற்று இன்று காலை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவகத்தில் இருந்த சசிகலா மற்றும் தினகரனின் பேனர்கள் அகற்றப்பட்டன.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், டி.டி.வி.தினகரனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவித்தார்.
நாங்கள் அனைவரும் டி.டி.வி.தினகரனை ஒதுக்கி வைத்துள்ளதாகவும் கூற்னார்.
நாங்கள் ஏற்கனவே எடுத்த முடிவின்படிதான் தலைமைக் கழகத்தில் இருந்த சசிகலா மற்றும் தினகரன் பேனர்கள் அகற்றப்பட்டதாக சண்முகம் தெரிவித்தார்.
இரு அணிகள் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்கு தாங்கள் தயாராக இருப்பதாக கூறினார். ஓபிஎஸ் அணியினர் எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைத்தாலும் அதற்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் சண்முகம் கூறினார்.
டி.டி.வி.தினகரன் தன் மீதான வழக்கை அவரே எதிர்கொள்வார் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
