we didnt see amma in apollo says ops
ஸ்டாலின் அரசியல் காரணங்களுக்காக தனக்கே உரிய பாணியில் அவ்வப்போது அறிக்கையை விடுவது வாடிக்கையாகிவிட்டது என தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கான பேச்சு வார்த்தை நடைபெறும் என பேசப்பட்டு வருகிறது. இதற்காக இரு தரப்பிலும் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. பேச்சு வார்த்தைக்கான காலம் கனிந்துள்ளது என பேசி வருகின்றனர்.
இதற்கடையில் மாநிலம் முழுவதும் தொண்டர்களை சந்தித்து ஆலோசனை கூட்டம் நடத்த ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இன்று தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்,
“74 நாட்கள் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருந்த போது நாங்கள் யாருமே பார்க்கவில்லை, மருத்துவமனை கவுன்சில் வெளியிடும் அறிக்கையை மட்டுமே நாங்கள் வெளியிடும் சூழல் இருந்தது.
ஜெயலலிதாவின் சிகிச்சை குறித்து மருத்துவருடன் பலமுறை ஆலோசித்துள்ளேன்.
ஜெ மரணத்தில் கட்சிக்கும் தொண்டர்களுக்கு இருக்கும் சந்தேகத்தை தீர்க்க வேண்டும் என்று கூறினார்.
மேலும் ஸ்டாலினுக்கு அவ்வப்போது எதையாவது கூறி கொண்டிருப்பது வாடிக்கையாகி விட்டது” எனவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
