கடலூரில் துணை மேயர் பதவிக்கு  வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும். 

அதிமுகவை வழிநடத்த சரியான ஆளுமை இல்லையே தவிர அதிமுக சரிந்துவிட்டது என கூற முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். மேலும் திமுகவிடம் 9 துணை மேயர் கட்டதில் 1 துணை மேயர்தான் கொடுத்ததாகவும், 1 மேயர் கேட்டதில் ஒன்று கூட தரவில்லை என்றும் கூறியுள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

செல்வி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வருகிறது, கட்சிக்கு ஈர்ப்பு மிக்க தலைமை இல்லாததால் அக்காட்சி கட்டுக்கோப்பை இழந்து வருகிறது, ஓபிஎஸ்- இபிஎஸ் என்ற இரட்டை தலைமையால் அதிமுகவை ஆளுமைமிக்க ஜெயலலிதாவை போலவோ, எம்ஜிஆரைப் போலவோ கட்டுக்கோப்பாக வழி நடத்த முடியவில்லை.

இந்நிலையில்தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்தது. அதைத் தொடர்ந்து நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளில் ஒரு மாநகராட்சியைக் கூட அதிமுகவால் கைப்பற்ற முடியவில்லை. 

மொத்தத்தில் அதிமுக காலப்போக்கில் கற்பூரம் போல கரைந்து வருகிறது என்ற விமர்சனமும் அக்காட்சியின் மீது எழுந்துள்ளது. ஓபிஎஸ் இபிஎஸ் தலைமை அதிமுகவை தவறாக வழிநடத்துகிறது, அதுதான் தோல்விக்கு காரணம் என்று பலரும் பொருமி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக தோல்வி குறித்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள் விடுதலை சிறைத்தைகள் கட்சித்த தலைவர் திருமாவளவன் அதிமுக வின் வாக்கு வங்கி சரியவில்லை என கூறியுள்ளார். மேலும் அவர் கூறியிருப்பதாவது:- 

சென்னை வடபழனியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், நகராட்சி துணைத் தலைவர்களின் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்தார்.அதற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர்,

"திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சிக்கு இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சியில் துணை மேயர், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணை தலைவர் பதவிகளை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. இதற்காக திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடலூரில் துணை மேயர் பதவிக்கு வழக்கறிஞர் தாமரைச்செல்வன் போட்டியிடுகிறார். அனைத்து இடங்களிலும் கூட்டணி கட்சிகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர்கள் துணை நிற்க வேண்டும்.

சென்னை உள்ளிட்ட ஒன்பது இடங்களில் துணை மேயருக்கு எழுதிக் கொடுத்தோம் அதில் ஒன்று கிடைத்துள்ளது. மேலும் மாநகராட்சி மேயர் பதவி ஒன்று கேட்டு இருந்தோம், கேட்டது கிடைக்கவில்லை என்றாலும் ஒதுக்கப்பட்டதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கிறோம். அதிமுக வாக்கு வங்கி சரிந்து விட்டது என்று சொல்ல முடியாது அதை வழி நடத்த வலிமையான ஆளுமை இல்லை. ஐந்தாண்டு காலம் ஆட்சியை தக்க வைப்பதற்காக பாஜகவை தோளில் சுமந்து வந்தனர். இதனால் அதிமுக மீது வைத்திருந்த மதிப்பு சரிந்து விட்டது. 

சசிகலா அதிமுகவுடன் இணைவது தனிப்பட்ட விருப்பம் அதில் நாம் தலையிட முடியாது. பாஜக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்று சொல்லும் அண்ணாமலை அவர்கள் 1,2 கூட ஒழுங்காக படிக்கவில்லை என்று தான் தெரிகிறது. பாஜக மூன்றாவது இடம் என்பது ஒரு மாயை, பல இடங்களில் டெபாசிட் கூட பெறவில்லை அதனை மூடி மறைப்பதற்காக ஏதோ ஒன்றைச் சொல்லிக் கொண்டிருக்கிறார். உக்ரேனில் சிக்கிக் கொண்டிருக்கும் மாணவர்களை உடனடியாக தாயகம் திரும்புவதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்தார்.