சந்தனக் கடத்தல் புகழ் வீரப்பனின் இளைய மகள் தற்போது தான் தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்து பணியாற்றி வருவதாக விளக்கமளித்துள்ளார்.

வீரப்பனின் முதல் மகள் வித்யாராணி நேற்று முரளிதரராவ், பொன்.ராதகிருஷ்ணன் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இதனையடுத்து முன்பொரு கூட்டத்தில் வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி விசிக கொடியை வைத்திருந்ததால் அவர் அக்கட்சியில் இருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் மூத்த மகள் படத்திற்கு பதிலாக இளைய மகள் விஜயலட்சுமி பெயரையும் சில செய்திகளில் பதிவு செய்திருந்தனர். 

இதனை கண்டித்து தனது விளக்கத்தை பதிவு செய்துள்ளார் விஜயலட்சுமி. ‘’பத்திரிகையாளர்கள் ஒரு செய்தி பதிவு செய்யும் முன்பு சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு பதிவு செய்தல் நன்று, ஜனநாயகத்தின் நான்காவது தூண் மதிப்பை மக்களிடம் கெடுக்க வேண்டாம்....

நான் (விஜயலட்சுமி வீரப்பன் இளைய மகள்), எனது கணவர் ( Salem Sabari )மற்றும் எனது அம்மா(முத்துலட்சுமி )ஆகியோர் வேல்முருகன் அவர்களின் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் பணியாற்றி வருகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளார். இவரது தாயார் முத்துலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் மாநில மகளிரணி தலைவியாக பதவி வகித்து வருகிறார்.