Asianet News TamilAsianet News Tamil

திமுகவுக்கு நாங்கள் எதிரி... இறங்கி வேலைசெய்யும் ரஜினி ரசிகர்கள்..!

யாக குண்டத்தில், அசுரனான, தி.மு.க., புகுந்து மக்களுக்கு அழிவை ஏற்படுத்த விடமாட்டோம். தி.மு.க., வரக்கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. 

We are the enemy of DMK ... Rajini fans working down ..!
Author
Tamil Nadu, First Published Apr 1, 2021, 11:22 AM IST

அரசியலுக்கு வருவதாக கூறி பின் வாங்கியதால் ரஜினி ரசிகர்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிக்கு வழங்கி தேர்தல் நேரத்தில் கவுரவித்துள்ளது மத்திய பாஜக அரசு. இந்நிலையில் யாருக்கு ஆதரவு என ரஜினி மன்ற நிர்வாகிகளிடமே விசாரித்தோம்.We are the enemy of DMK ... Rajini fans working down ..!

’’ரஜினியை தரக்குறைவாக வசை பாடியவர்கள் யார் என ரசிகர்களுக்கு தெரியும். 'வயதான காலத்தில் ஓய்வெடுக்க வேண்டிய ரஜினி' என, நேற்று அரசியலுக்கு வந்த ஒருவர் பேசினார். இதுபோன்ற அவதுாறுகளை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். தேர்தல் நெருங்கும் போது ரஜினி கட்டாயம், 'வாய்ஸ்' கொடுப்பார் என, நம்புகிறோம். ரஜினி உத்தரவுப்படி ரசிகர்களின் ஓட்டு யாருக்கு என்பதை, கூடி முடிவெடுப்போம்’’ என்கிறார் மதுரையை சேர்ந்த மாநகர் மாவட்ட துணை செயலர், பி.அழகர்சாமி.

We are the enemy of DMK ... Rajini fans working down ..!

’’ரசிகர்களின் ஓட்டு யாருக்கு என்பது குறித்து தேர்தல் நெருங்கும்போது முடிவு செய்யப்படும். அதுவரை மவுனம் காப்போம். கருத்து எதுவும் ரஜினி சொல்லாத பட்சத்தில், எங்கள் ஓட்டு, 'நோட்டா'வுக்காக கூட இருக்கலாம்’’ என்கிறார் மத்திய மண்டல செயற்குழு உறுப்பினரான .எஸ்.ஆனந்த். ’’யாக குண்டத்தில், அசுரனான, தி.மு.க., புகுந்து மக்களுக்கு அழிவை ஏற்படுத்த விடமாட்டோம். தி.மு.க., வரக்கூடாது என்பது எங்களின் நிலைப்பாடு. ஒரு வேளை வந்தால் ரஜினி ரசிகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்’’என்கிறார் ராமநாதபுரம் முன்னாள் மாவட்ட செயலர், ஆர்.பி.பாலநமச்சிவாயம்.We are the enemy of DMK ... Rajini fans working down ..!

மூத்த தலைமை நிர்வாகி, ஏ.ஓம்சேகர் இதுகுறித்துக் கூறுகையில், ’’ரஜினி அரசியலுக்கு வராவிட்டாலும், ஆன்மிக தலைவர் அவர்தான். ஆன்மிகத்துக்கு எதிரான தி.மு.க.,வுக்கு நாங்கள் எதிரி. சென்னையில், சைதை துரைசாமி உள்ளிட்டோருக்கு நேரடியாக களப் பணியாற்றி வருகிறோம்’’ எனத் தெரிவித்தார்.

Follow Us:
Download App:
  • android
  • ios