Asianet News TamilAsianet News Tamil

என்ன நடந்தாலும் சரி எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்.. எஸ்.பி வேலுமணிக்காக வரிந்து கட்டும் ஓபிஎஸ்.இபிஎஸ்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் திரு.எஸ். பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அவருடைய தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. 

We are ready to face whatever happens. admk Eps Ops statement.
Author
Chennai, First Published Aug 10, 2021, 1:25 PM IST

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முன்னாள் அமைச்சர்களை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும், மக்கள் நலன் காக்கும் பணிகளில் கவனம் செலுத்துங்கள் எனவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:- 

We are ready to face whatever happens. admk Eps Ops statement.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடா, முன்னாள் அமைச்சர் திரு.எஸ். பி வேலுமணி அவர்களுக்கு சொந்தமான இடங்களிலும், அவருடைய தொடர்பில் இருப்பவர்கள் ஒரு சிலரின் இடங்களிலும், லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்துவதாகவும் செய்திகள் வருகின்றன. மக்கள் நலப் பணிகளில் முழு கவனம் செலுத்தாமல், திமுக அரசு கழகத்தவர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டுகிறதோ என்ற ஐயப்பாடும், வருத்தமும், மனதில் எழுகின்றன. துடிப்பான கழகச் செயல்வீரர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்கள் மீது தொடர்ந்து அவதூறு பரப்பும் வகையில் திட்டமிட்டு பொய் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்த நிலையில், இன்றைய சோதனைகள் கண்டிக்கத்தக்கவை என்றே கருதுகிறோம்.

We are ready to face whatever happens. admk Eps Ops statement.

கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும், சந்திக்க கழகம் எப்போதும் தயாராகவே உள்ளது. ஆனால் ஆதாரம் ஏதுமின்றி உண்மை என்ன என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே, ஊழல் பழி சுமத்துவது நியாயமற்றது, இத்தகைய சோதனைகள் அனைத்தையும் தாங்கி நின்று, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்கள் பணியில் தொடர்ந்து ஈடுபடும், அன்பு வழியில், அறவழியில் அரசியல் தொண்டாற்றும் என அவர்கள் தங்களது அறிக்கையில் வலியுறுத்தி உள்ளனர். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios