இந்தியாவில் அதிகம் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்து கொள்கிறேன் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில்  முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில்;-  கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் பரவி வருகிறது. உலக பொருளாதாரம் மட்டுமல்ல, இந்திய, தமிழக பொருளாதாரமும் பின்னடைவை சந்தித்து வருகிறது. கொரோனா காலத்திலும் பல்வேறு தளர்வுகளை மக்களுக்கு வழங்கியுள்ளோம். 

நோய் பரவலை தடுக்கவே இபாஸ் முறையை கொண்டு வந்தோம். பொதுமக்களின் நலன் கருதி இ-பாஸ் நடைமுறை எளிதாக்கப்பட்டுள்ளது. மிக அத்தியாவசியம் என்றால் மட்டுமே இபாஸ் பெற்று செல்ல வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது.

இந்தியாவில் அதிகம் கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு என்பதை தெரிவித்து கொள்கிறேன். கொரோனா தொற்றை குறைப்பதற்கு தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்க முடியாத நிலையில் இருக்கிறோம். ஆகையால், கர்ப்பிணி, வயதானோர் மற்றும் நோயாளிகள் வெளியில் செல்வதை கண்டிப்பாக தவிர்க்க தவிர்க்க வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், பேசிய அவர் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி வருகிறோம். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மாவட்டமாகவும் வேலூர் திகழ்கிறது. குடிமராமத்து பணிகள் காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பியுள்ளன. தேவையான இடங்களில் தடுப்பணைகளை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.