நாம் மானம் கெட்டவர்கள், இந்துக்களை இழிவா பேசிய ஆ.ராசா ரோட்ல நடக்கிறார், பாஜகவை தூக்கி சாப்பிட்ட கடம்பூர் ராஜூ
இந்துக்களை இழிவாகப் பேசிவிட்டு ஆ. ராசா தைரியமாக சாலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார் நாம் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், நாம் எல்லோரும் மானம் கெட்டவர்கள் தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார்.
இந்துக்களை இழிவாகப் பேசிவிட்டு ஆ. ராசா தைரியமாக சாலையில் நடமாடிக் கொண்டிருக்கிறார் நாம் எல்லோரும் அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறோம், நாம் எல்லோரும் மானம் கெட்டவர்கள் தான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசியுள்ளார். மேலும், திமுகவுக்கு தெம்பு திராணி இருந்தால் ஆட்சியைக் கலைத்துவிட்டு 2024 நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கட்டும் எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது என அவர் கூறியுள்ளார்.
சமீபத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நீ இந்து என்றால் நீ சூத்திரம் தான், நீ இந்து என்றால் பஞ்சமன் தான், நீ இன்று என்றால் தீண்டத்தகாதவன் தான், சூத்திரன் என்றால் வேசியின் பிள்ளைகள் என்று இந்து மதம் கூறுகிறது, அப்படி என்றால் இங்கு எத்தனை பேர் வேசியின் பிள்ளைகளாக இருக்க விரும்புகிறீர்கள் என அவர் கேள்வி எழுப்பினார்.
அவரின் இந்தக் கேள்வி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜகவினர் ராசாவுக்கு எதிராக கொந்தளித்து வருகின்றனர். அவருக்கு எதிராக பாஜகவினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: திறமையில்லா திமுக அரசு, செய்த தவறுகளை மக்கள் மீது திணிக்கிறது.. ஸ்டாலின் அரசை டார் டாரா கிழிக்கும் அண்ணாமலை.
பாஜக உடன் சேர்ந்து தற்போது அதிமுகவினரும் ஆ. ராஜாவை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி ஆ.ராசா பேசியதை மிகக் கடுமையாக கண்டித்தார். இதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஆ. ராசா இந்துக்களை இழிவுபடுத்தி விட்டு சாலையில் நடமாட விட்டிருக்கிறோம் என கொந்தளித்துள்ளார்.
இதையும் படியுங்கள்: #TNbreakfast: கோவில் நிதி மூலம் காலை உணவுத் திட்டம்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஐடியா கொடுக்கும் கி.வீரமணி..!
மின் கட்டண உயர்வை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட கடம்பூர் ராஜு, திமுகவை கடுமையாக விமர்சித்தார், திமுகவுக்கு தெம்பு திராணி இருந்தால் ஆட்சியை கலைத்துவிட்டு 2024 நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கட்டும், எதிர்க்கட்சியாக கூட வரமுடியாது, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக பூஜ்ஜியம் தான் கிடைக்கும்,
ஆ.ராசா இந்துக்களை அவதூறாக பேசி விட்டு ரோட்டில் நடமாடிக் கொண்டிருக்கிறார், அதனை நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறோம், உண்மையிலேயே நாம் மானம் கெட்டவர்கள் தான், இதையெல்லாம் மனதில் வைத்துக் கொண்டுதான் நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் திமுகவுக்கு பாடம் புகட்ட போகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.