Asianet News TamilAsianet News Tamil

1 1/2 லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க்குற்றவாளிகள்.. இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக்கூடாது.. அன்புமணி

திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த இராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

War criminals who massacred Tamils .. India should never give asylum .. anbumani ramadoss
Author
Tamil Nadu, First Published May 11, 2022, 11:39 AM IST

ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்த  போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பொருளாதார சீரழிவு

இதுதொடர்பாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- இலங்கையில் ஆட்சியாளர்களுக்கு எதிரான மக்கள் புரட்சி தீவிரமடைந்துள்ளது.  அடக்குமுறை மற்றும் பொருளாதார சீரழிவுக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பை தாங்கிக்கொள்ள முடியாத முன்னாள் அதிபர் மகிந்த இராஜபக்சே மற்றும் அவரது குடும்பத்தினர் வெளிநாடு தப்ப முயல்வதாக தெரிகிறது.

War criminals who massacred Tamils .. India should never give asylum .. anbumani ramadoss

இராஜபக்சே பதுங்கல்

திரிகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கியிருந்த இராஜபக்சே இந்தியாவுக்கு தப்பிச் சென்று விட்டதாக வெளியான செய்திகளை இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுத்திருக்கிறது. ஆனாலும் கடல் வழியாக அவர் இந்தியாவுக்கு வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

War criminals who massacred Tamils .. India should never give asylum .. anbumani ramadoss

போர்க்குற்றவாளிகள்

2009 ஈழப் போரில் ஒன்றரை லட்சம் தமிழர்களை படுகொலை செய்தவர்கள் இராஜபக்சே சகோதரர்கள் தான்.  அவர்களின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களை ஐ.நா. மனித உரிமை ஆணையம் திரட்டியுள்ளது. அப்படிப்பட்ட போர்க்குற்றவாளிகளுக்கு இந்தியா ஒருபோதும் தஞ்சம் அளிக்கக் கூடாது.

War criminals who massacred Tamils .. India should never give asylum .. anbumani ramadoss

கைது

போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை ஆதாரங்களின் அடிப்படையில் இராஜபக்சே சகோதரர்களை கைது செய்து, பன்னாட்டு  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தி, தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளை இந்தியாவும், பிற உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios