Waiting for Vishwaroopam 2? Kamal Haasan has some good news for you
இன்ஸ்டெண்ட் அரசியல்வாதியாக உருவெடுத்து பெரும் வரவேற்பை பெறுவதென்பது இந்திய அரசியலில் அவ்வளவு சாதாரணமானதில்லை. ஆனால் இந்த மரபை உடைத்துக் காட்டியவர் அரவிந்த் கெஜ்ரிவால். மக்களின் அபிமானத்தை வென்றதோடு போட்டியிட்ட இரண்டு தேர்தல்களிலும் முதல்வராக ஆனார்.
இவருக்கு அடுத்து அப்படியொரு பாக்கியத்தை கைவரப்பெற்றவர் கமல்ஹாசன். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் தமிழகத்தை ஆளும் அ.தி.மு.க.வுக்கு எதிராக ட்விட்டர் ஆயுதத்தை கையிலெடுத்து டிஜிட்டல் அரசியல்வாதியானார். ஆனால் குறுகிய காலத்தில் செம்ம்ம ரீச்சை கண்டார். சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வேக்கள் சில அவர் ரஜினியையும் விஞ்சி நிற்பதை காட்டின.
தொடர் மீடியா சந்திப்புகள், கொசஸ்தலை ஆற்றில் ஆய்வு, விவசாயிகளுடன் ஆலோசனை, அரசியலுக்கு வருவேன் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அண்டை மாநில முதல்வர்களுடன் சந்திப்பு என டாக் ஆஃப் தி நேஷனல் பாலிடிக்ஸாக இருந்தார்.

ஆனால் கடந்த ஒரு மாதகாலமாக திடீரென உலகநாயகனின் தலையை அரசியலரங்கில் காணவில்லை எங்கே போனார்? எதற்கு போனார்? என்று மீடியாக்கள் யோசித்துக் கொண்டிருந்தன. அதிரடியாய் தாக்கி பேட்டி கொடுத்து நியூஸ் சேனல்களில் பப்ளிகுட்டி தேடிக் கொள்ள கமல் இல்லாமல் தவித்தனர் தமிழக அமைச்சர்கள்.
இந்நிலையில் இப்போது ட்விட்டரில் வந்திருக்கும் கமல்ஹாசன், தான் விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சேர்ப்பு பணியில் பிஸியாக இருப்பதாக கூறியுள்ளார். ‘விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக இருக்கும். இதற்காக உழைத்துள்ள அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி.’ என்று கூறியுள்ளார்.
ஆக சினிமா வேலையில் பிஸியாக இருப்பதால் அரசியலுக்கு லீவு விட்டதை சொல்லாமல் சொல்லி இருக்கிறார் கமல். படத்தை ரிலீஸ் செய்துவிட்டு பாலிடிக்ஸுக்கு வருகிறேன்! என்று அவரது ட்விட்டருக்கு விளக்கவுரை கொடுத்துள்ளனர் அரசியல் பார்வையாளர்கள்.
இந்நிலையில் இந்த விஷயத்துக்கு ‘அடக்கருமமே! நீங்க கட்சி ஆரம்பிச்சதும் உங்க பின்னாடி வந்து நின்னா, பாதி ஆத்துல நிக்க வெச்சுட்டு மீதி படத்தை முடிக்க போறேன்னு போயிட்டீங்கன்னா எங்க கதி என்னவாகும்?’ என்று புலம்பிக் கொட்டியுள்ளனர் அவரை நம்பி அரசியலுக்கு தயாரானோர்.
கமலின் படத்தை மட்டுமல்ல அவரது பாலிடிக்ஸையும் புரிந்து கொள்ள ரொம்ப அறிவு வேண்டும் போலிருக்கிறது.
