Asianet News TamilAsianet News Tamil

Two more corona vaccines: அடி தூள்.. இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகள்.. மோடி அதிரடி சரவெடி.

சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ்  மற்றும் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின்  கோர்பிவேக்ஸ்  ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Waaw .. Two more corona vaccines in India .. Modi Action and achivement.
Author
Chennai, First Published Dec 28, 2021, 11:51 AM IST

இந்தியாவில் மேலும் இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.  இந்த தகவல் நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ்  மற்றும் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின்  கோர்பிவேக்ஸ் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2019 டிசம்பர் இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் கபளீகரம் செய்துள்ளது. இதுவரையில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான மக்கள் இந்த வைரஸால் கொத்துக்கொத்தாக உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸில் இருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் ஒட்டு மொத்த உலகமும் திண்டாடி வருகிறது. தடுப்பூசி மட்டுமே இந்த வைரஸில் இருந்து காப்பாற்றும் என்ற முனைப்பில் அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகள் தடுப்பூசிகளை உற்பத்தி செய்து இதை மக்களுக்கு விநியோகித்து வருகிறது.

Waaw .. Two more corona vaccines in India .. Modi Action and achivement.

தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு கொரோனா பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தாது, தடுப்பூசிகள் உயிர்காக்கும் நிவாரணியாக இருந்துவருகிறது என்றும் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனாலும் கொரோனா வைரஸ் என்பதே கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக மனித சமூகத்தில் நீங்க முடியாது அரக்கனாக மாறியுள்ளது. கொரோனா என்பதை முற்றிலுமாக ஒழிக்க முடியாது, அதனுடன் நாம் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என மருத்துவ உலகம் அதிர்ச்சி தெரிவித்துள்ளது. இதேநேரத்தில் கொரோனா வைரஸ் அடிக்கடி பிழவுகளுடன் உருமாறி வருகிறது. கொரோனா என்பது டெல்டா வைரஸ் ஆக உருமாறி கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியது. அது முதல் அலையில் இருந்து இரண்டாவது அலையாக உருவெடுத்தது. தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு டெல்டா வகை வைரஸ் அதிக பிறழ்வுகளுடன் உருமாறியுள்ளது. இதுவோ ஒமைக்ரான் வைரஸ் ஆக உள்ளது.

Waaw .. Two more corona vaccines in India .. Modi Action and achivement.

இந்நிலையில் இந்திய அரசு மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவில் கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு என இரண்டுவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வரும் நிலையில் மேலும் கூடுதலாக இரண்டு தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. சீரம் நிறுவனத்தின் கோவோவேக்ஸ்  மற்றும் பயாலஜிக்கல் இ நிறுவனத்தின்  கோர்பிவேக்ஸ்  ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகளுக்கு அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி அளித்து மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது ஒட்டுமொத்த நாட்டு மக்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios