Asianet News TamilAsianet News Tamil

அடி தூள்.. கொரோனாவை அழிக்க இந்த ஒரு ' பூ ' போதும்.. உலக நாடுகளை அலறவிட்ட ஐஐடி ஆராய்ச்சி.

புரான்ஷ் மரம் கடல் மட்டத்தில் இருந்து 1500-3600 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இது உத்தரகாண்ட் மாநிலத்தின் மரமாகும், இது உள்ளூர் மக்களால்  அதிக அளவில் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் ஏப்ரல் மாதங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கும் புரான்ஷ் பூக்கள் பொதுவாக பாரா மலர்கள் என்று அழைக்கப்படுகின்றன. 

Waaw.. this one 'flower' is enough to destroy the corona .. IIT research that has roared the nations of the world.
Author
Chennai, First Published Jan 25, 2022, 1:45 PM IST

கொரோனா வைரஸுக்கு எதிரான மருந்து ஆராய்ச்சிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இமயமலையிலுள்ள  புரான்ஷ்  மரத்தின் ' பூ ' கொரோனா வைரஸ் தொற்றை அழிக்கவல்லது என மண்டி ஐஐடி பேராசிரியர்கள் நடத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இது பல்வேறு சர்வதேச நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தியா சீனா போன்ற நாடுகளில் கொரோனா வைரசுக்கு இரண்டு வகையான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஒன்று அலோபதி  எனப்படும் நவீன மருத்துவம் மற்றொன்று பாரம்பரிய முறையிலான சித்த மருத்துவம், இந்த இரண்டு வகையான சிகிச்சை முறைகளும் கொரோனா வைரசுக்கு எதிராக கை கொடுப்பதை காணமுடிகிறது. இந்நிலையில்தான் மாண்டி ஐஐடி பேராசிரியர்கள் புரான்ஷ் என்ற மரத்தின் பூவிலிருந்து கொரோனா வைரஸ் கிருமியை அழிக்க மருந்து கண்டுபிடுக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா தொற்று வேகமாக பரவு வருகிறது. இது போன்ற சூழ்நிலையில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது மற்றும் தடுப்பூசி போடுவது மட்டுமே தொற்று நோயை தடுப்பதற்கான ஒரே வழியாக கருதப்படுகிறது. ஆனால் விரைவில் கொரோனாவுக்கு மரத்திலிருந்து மருந்து வரக்கூடும் அது நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மூலிகையாக  திகழும் என இந்திய தொழில்நுட்ப நிறுவனம் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம் இசிஜிஇபி  ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் இமய மலைகளில் காணப்படும் ஒரு தாவரத்தில் கொரோனா மருந்து கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். 

Waaw.. this one 'flower' is enough to destroy the corona .. IIT research that has roared the nations of the world.

கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாப்பதில் புரான்ஷ் தாவரம் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் விரிவாக காணலாம்:-கொரோனா வைரசை எதிர்த்து போராட புரான்ஷ் செடி நமக்கு உதவுகிறது, விஞ்ஞானிகளின் கூற்றுப்படி புரான்ஷ் தாவரத்தில் காணப்படும் மூலிகை புரான்ஷ் (ரோடோ டென்ட்ரான் ஆர்போரியம்) என்ற  தாவரமானது கொரோனா வைரஸை எதிர்த்துப் போராட நமக்கு உதவும், அதன் பூக்களின் இதழ்களில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் என்ற பொருள் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கிறது. இந்த ரசாயனம் வைரஸ் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதை உட்கொள்வதன் மூலம் வைரஸ் உடலில் உயிர் வாழ்வதை அது  தடுக்கிறது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் காஷ்மீர் ஆகிய பகுதிகளில் புரான்ஷ் தாவரம் அதிக அளவில் காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் ஏற்கனவே தங்கள் ஆரோக்கியத்திற்காக இந்த இதழ்களின் சாற்றை பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த பூ எவ்வாறு உடலில் கொரோனா பரவாமல் தடுக்கிறது...

மரபணு பொறியியல் மற்றும் உயிரி தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் மருத்துவர் ரஞ்சன் நந்தா கூறுகையில், புரான்சில் பைட்டோகெமிக்கல் உடலில் இரண்டு வழிகளில் செயல்படுகின்றன. முதலில் அவை கொரோனாவில் காணப்படும் ஒரு நொதியுடன் இணைக்கப்படுகின்றன, இதன் மூலம் உடலில் வைரஸ் பெருகுவதை இது தடுக்கிறது. இதேபோல் அவை நம் உடலில் காணப்படும் ACE-2 என்சைம்வுடன் இணைக்கப்படுகிறது, ACE-2  என்சைமே மூலம் தான் வைரஸ் நம் உடலில் நுழைகிறது எனவே அதை இந்த மலரில் உள்ள பைட்டோ கெமிக்கல் தடுக்கிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி பைட்டோ கெமிக்கல் என்சைமுடன் சேரும் செயல்முறையின் காரணமாக கொரோனா வைரஸ் நம் உடலில் பாதிப்பை ஏற்படுத்துவது தடுக்கப்படுகிறது. மற்றும் தொற்று அபாயம் தவிர்க்கப்படுகிறது.

ஐஐடி பேராசிரியர் டாக்டர் ஷியாம் குமார் மசகபள்ளி கூறுகையில், இந்த பூ மூலம் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. தங்களது முழு குழுவும் இமயமலையில் காணப்படும் மற்ற மருத்துவ  தாவரங்கள் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார். புரான்ஷ் தாவரம் இமய மலைப் பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் காஷ்மீரில் அதிகமாக காணப்படுகிறது. புரான்ஷ் பூக்களில் இருந்து தயாரிக்கப்படும் சிரப் இதயநோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த இதழ்கள் வலி, தசை வலி மற்றும் காய்ச்சலை போக்க பயன்படுத்தப்படுகிறது. உள்ளூர் மக்கள் இதை ஸ்குவாஷ் மற்றும் ஜாம் செய்ய பயன்படுத்துகின்றனர். மேலும் அந்த இதழில் செய்யப்படும் சட்னி இன்னும் கிராமப்புறங்களில் விரும்பத்தக்க உணவாக உள்ளது.

Waaw.. this one 'flower' is enough to destroy the corona .. IIT research that has roared the nations of the world.

புரான்ஷ் மரம் கடல் மட்டத்தில் இருந்து 1500-3600 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. இது உத்தரகாண்ட் மாநிலத்தின் மரமாகும், இது உள்ளூர் மக்களால்  அதிக அளவில் உணவு பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மார்ச் ஏப்ரல் மாதங்களில் சிவப்பு நிற பூக்கள் பூக்கும் புரான்ஷ் பூக்கள் பொதுவாக பாரா மலர்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்தியாவைத் தவிர பாகிஸ்தான், சீனா, நேபாளம், தாய்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளிலும் இது காணப்படுகிறது. ராமாயணத்தில் இமயமலையிலிருந்து அனுமன் சஞ்சீவி மூலிகைக்காக பூதி மலையை எடுத்துச் சென்றதால் அது இலங்கையிலும் காணப்படுவதாக மக்கள் இதைத் தொடர்புபடுத்தி பேசுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios