Asianet News TamilAsianet News Tamil

முன்கூட்டியே வந்த சட்டமன்ற தேர்தல்.. தலையை பிய்த்துக் கொள்ளும் தமிழக அரசியல் கட்சிகள்.

தேர்தலுக்கு வெரும் 37 நாடுகள் மட்டுமே உள்ளதால் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்பதால் இது அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை. 
 

Voting on May 6 in Tamil Nadu, Puthuvai and Kerala. Decided to hold as a single phase.
Author
Chennai, First Published Feb 26, 2021, 5:54 PM IST

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரி, கேரளாவுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார். 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மே 24ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதேபோல  கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநில சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே ஜூன் மாதங்களில் நிறைவடைய உள்ளது. புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகியதை தொடர்ந்து அங்கு சட்டசபை காலியாக உள்ளது. இந்நிலையில் இந்த 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் முழுவீச்சில் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் ஐந்து மாநிலங்களிலும் நேரில் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர். 

Voting on May 6 in Tamil Nadu, Puthuvai and Kerala. Decided to hold as a single phase.

இந்நிலையில் மாநிலங்களில்  தேர்தல் நடத்துவதற்கான சூழல் மற்றும் அரசியல் கட்சிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர்கள் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்றும், தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும்
என்றும்  தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்தார்.  மே 2-ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  வாக்கு எண்ணிக்கை மே- 2 தேதி நடைபெற உள்ளது. மார்ச் 12ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும், 

Voting on May 6 in Tamil Nadu, Puthuvai and Kerala. Decided to hold as a single phase.

மார்ச் 19-ம் தேதி மனு தாக்கல் நிறைவடைகிறது.  மார்ச் 20ஆம் தேதி வேட்புமனு மனு பரிசீலனை,  மார்ச் 22 வேட்புமனுவை திரும்பப் பெறுதல், என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகம், புதுவை,  கேரளாவில் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிட தக்கது. தேரதல் முடிவுக்கு 26 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. தேர்தலுக்கு வெரும் 37 நாடுகள் மட்டுமே உள்ளதால் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றையெல்லாம் செய்து முடிக்க வேண்டும் என்பதால் இது அரசியல் கட்சிகளுக்கு நிச்சயம் நெருக்கடியான சூழலை உருவாக்கியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.  

 

Follow Us:
Download App:
  • android
  • ios