Asianet News TamilAsianet News Tamil

பயப்பட வேண்டாம்.. ஓட்டு மெஷினுக்கு ஒண்ணும் ஆகாது.. அடித்துக்கூறும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு..!

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

Voting machines are safe...Chief Electoral Officer satyabrata sahoo
Author
Chennai, First Published Apr 19, 2021, 6:13 PM IST

வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் எங்கும் எந்த விதிமீறலும் நடைபெறவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. எங்கும் எந்த விதி மீறலும் நடைபெறவில்லை. அதில் எந்த தவறும் இதுவரை இல்லை. அப்படி ஏதேனும் புகார் இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

Voting machines are safe...Chief Electoral Officer satyabrata sahoo

மே 2-ம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். வாக்குகள் எண்ணுவதற்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைப்படி தகுந்த இடைவெளியுடன் மேஜைகள் போடப்படும். சிறிய தொகுதிகளுக்கு 14 மேஜைகளும், பெரிய தொகுதிகளுக்கு 30 மேஜைகளும் போடப்படும். 234 தொகுதிகளுக்கும் 234 பொது பார்வையாளர்கள் வாக்கு எண்ணிக்கையை கண்காணிப்பார்கள். அத்தனை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அதிகாரிகள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு முதல்முறையாக ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்பு தொடங்கியுள்ளது. 

Voting machines are safe...Chief Electoral Officer satyabrata sahoo

மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியாது. அது ஒரு கால்குலேட்டர் போல தான். வாக்கு எண்ணும் மையத்திற்கு அருகில் கண்டெய்னர் வந்தது தொடர்பான விசாரணையில், அது பள்ளிகளுக்கான கழிப்பறை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டது, தவிர அதில் வேறு எந்த ஒரு செயல்பாடும் நடைபெறவில்லை என்று சத்யபிரதா சாகு கூறியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios