எந்தப் பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு செல்லும் வகையில் செட்டப் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
எந்தப் பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு செல்லும் வகையில் செட்டப் செய்யப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன என விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சிதம்பரம் தனித் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். பானை சின்னத்தில் போட்டியிடும் அவர், அரியலூர் மாவட்டம் அங்கனூர் வாக்குச் சாவடியில் அவரது ஓட்டை பதிவு செய்தார். அப்போது, அவரது தாயார் பெரியம்மாவுடன் பூத்துக்கு வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்கை செலுத்திவிட்டு வெளியே வந்த திருமாவளவன், ‘’தேர்தல் இப்போது அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால், ஒரு சில இடங்களில் எந்திரங்கள் பழுதாகி இருக்கின்றன. சில இடங்களில் எந்த பட்டனை அழுத்தினாலும் இரட்டை இலைக்கு வாக்கு வருவதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வருகின்றன.

இதுவரைக்கும் தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகதான் செயல்பட்டு வந்தார்கள். இன்னைக்கு ஒருநாளாவது நேர்மையாக பணியாற்றி வாக்குப் பதிவை முடிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆனால், வாக்காளர்கள் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், புதிய எந்திரம் ஒன்றையும் பொறுத்தி உள்ளது. வாக்களித்த சிறிது நேரத்தில் வாக்கு எந்திரத்துக்கு பக்கத்தில் ஒரு சிறிய கருப்பு எந்திரப்பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில் விளக்கு எரிந்த பின் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்கிற சின்னம் தோன்றி மறைகிறது. அதை உறுதி செய்த பிறகு நாம் வெளியேறலாம். நாம் வாக்களித்த சின்னதிற்கு மாறாக வேறு சின்னம் வந்தால் அப்போதே தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் புகார் அளித்து வாக்குப்பதிவை நிறுத்தலாம். 
அவ்வாறு தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து இருக்கும் நிலையில் திருமாவளவன் எந்தப்பட்டனை அழுத்தினாலும் அதிமுகவுக்கு செல்வதாக முரண்பட்ட கருத்தை கூறியிருக்கிறார்.
