ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக கூறி அம்மாநில மக்களை பிரதமர் நரேந்திர மோடி ஏமாற்றிவிட்டார் என கூறி, நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்று வரம் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தை தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் தெலுங்கு தேச கட்சி எம்பி ஜெயதேவ்  தொடங்கி வைத்தார்.

கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கிப்போனது. இந்நிலையில்  நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. அவை தொடங்கிய முதல் நாளே, மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரக்கோரி தெலுங்கு தேசம் கட்சி சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் அளித்தது. 

தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் கேசினேனி சீனிவாஸ் கொண்டு வந்து உள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் ஏற்கப்படுவதாக சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அறிவித்தார். மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது, அனைத்து தரப்பிலும்  ஆச்சரியத்தையும்இ அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.  விவாதத்தில் கலந்து கொள்ள கட்சிகளுக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு தேச கட்சி எம்பி ஜெயதேவ்  மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை  தொடங்கி வைத்து பேசினார். பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வெற்றி வாக்குறுதிகளை ஆந்திர மக்களுக்கு கொடுத்தார்கள்.

ஆனால் அதனை நிறைவேற்றவில்லை. ஆந்திராவை பிரதமர் மோடி ஏமாற்றி விட்டார்.  அவர்கள் இதனை கவனித்து கொண்டு இருக்கிறார்கள். வரும் தேர்தலில் அவர்கள் பொருத்தமான பதிலை அளிப்பார்கள் மத்திய பாஜக அரசு எங்களை நிச்சயமற்ற தன்மைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது . என கூறினார்.

விவாதத்திற்கு பிறகு, இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறும் என்று மக்களவை சபாநயகர் சுமித்ரா மகாஜன் தெரிவித்தார்.

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தில் சிவசேனா கட்சி எம்.பிக்கள் பங்கேற்கவில்லை.   மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான விவாதத்தை புறக்கணித்து பிஜூ ஜனதா தள கட்சி எம்.பிக்கள் 19 பேர் வெளிநடப்பு  செய்தனர். தொடர்ந்து விவாதம் நடைபெற்ற வருகிறது.