திமுக செயல் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் 65-வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் திமுகவினரால் கொண்டாடப்படுகிறது

தனது பிறந்தநாளையொட்டி, இன்று காலை, திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.

தாய் தாயாளு அம்மாவிடம் ஸ்டாடிலன் ஆசி பெற்ற பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திலும், பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மரியாதை செலுத்தினார். 

ஸ்டாலினுடன், திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ஜெ.அன்பழகன் உள்ளிட்டோரும் உடனிருந்தனர். 

ஸ்டாலினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அப்போது கருணாநிதியின் உடல் நலம் குறித்தும் கேட்டறிந்துள்ளார். இதேபோல் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஸ்டாலினுக்கு டுவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார்.

இதன் பின்னர், அண்ணா அறிவாலயம் வந்த ஸ்டாலின், தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார். ஸ்டாலினுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

அப்போது ஸ்டாலினுக்கு வாழ்த்து சொல்ல வந்த திமுக தொண்டர், ரூ.66,000 காசோலையுடன் உற்கமாக காத்துக் கொண்டிருந்தார்.

மற்றொரு தொண்டர் ஒருவர், ஆடு மற்றும் ஆட்டுக்குட்டிகளைப் பரிசளிக்கவும் காத்திருந்தார். சிலர் பணமாலையை தூக்கிக் கொண்டு வந்துள்ளார். இதனைப் பார்த்தவர்கள் திகைத்துப் போயினர்.