தகுதி நீக்க வழக்கில் இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு வழங்கியதால், தற்போது இந்த வழக்கு 3வது நீதிபதிக்கு சென்றுள்ளது. தங்களுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வரும் என்ற நம்பிக்கையில் இருந்த தினகரன் தரப்பு இந்த தீர்ப்பில் கடும் அதிர்ச்சியில் உள்ளது தினகரன் தரப்பு. இதில், சபாநாயகருக்கு எதிரான தனது மனுவை நீதிமன்றத்தில் வாபஸ் வாங்கப் போகிறேன் எனவும், தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப்போகிறேன் எனவும் தங்க தமிழ்ச்செல்வன் அறிவித்துவிட்டார். 

இதனையடுத்து, தினகரனுக்கு தங்க தமிழ்செல்வனுக்கும்  முட்டாள் ஏற்பட்டதாக தகவல் கசிந்தது. அப்போது, மூன்றாவது நீதிபதி தீர்ப்பு அளிப்பதற்குள் நீங்கள் ஒட்டுமொத்தமாக உங்கள் பதவியை ராஜினாமா செய்யுங்கள் என சொன்னாராம் தினகரன். ஆனால் தமிழ்செல்வனோ நீங்களும் எங்களோடு ராஜினாமா செய்யுங்கள் இன்னும் நெருக்கடி பலமாக இருக்கும் என தங்கத்தமிழ் செல்வனும் பேசினாராம். உங்களை நம்பி நாங்கள் வந்தோம், இப்போது பதவியை இழந்து நிற்கிறோம், ஆனால் நீங்களோ இப்போது எம்.எல்.ஏ வாக இருக்கீங்க என தொடர்ந்து இருவருக்கும் ஏற்பட்ட வாதத்தில் நான் உங்களை நம்பி வரவில்லை, சின்னம்மா என்ற ஒருவருக்காகத்தான் ஆளும் தரப்பை பகைத்துக்கொண்டு உங்களோடு இருக்கிறேன் என காட்டமாக பேசினாராம் தங்க தமிழ்செல்வன். அதனையடுத்து தினகரன் சொன்னதைப்போல பதவியை ராஜினாமா செய்ய ஒப்புக் கொண்ட அவர், அடுத்த நாளில் இடைத் தேர்தல்வந்தால் நான் போட்டியிடமாட்டேன் என்று தினகரனை அதிரவைத்தார்.

தினகரனுடன் ஏற்பட்ட இதனையடுத்து  மோதலை அடுத்து தங்க தமிழ்ச்செல்வன் சசிகலாவை சந்திக்க பெங்களூரு சென்றார் ஆனால், சந்திக்க முடியாமல் சென்னை திரும்பியிருக்கிறார்.

தினகரனுக்கும் தங்க தமிழ்ச்செல்வனுக்கும் லடாய் முற்றியது என அறிந்த விவேக், உடனே தங்கத்தை தொடர்புகொண்டு நீங்க சின்னம்மாவ பாருங்க தினகரன் செய்றத சொல்லுங்க  என்று ஒரு போன் நம்பரை கொடுத்து பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தார் . இதையடுத்து ஜூன் 20ஆம் தேதி, விவேக் கொடுத்த எண்ணுக்குத் தொடர்புகொண்ட தங்க தமிழ்ச்செல்வன், சசிகலாவை பார்க்கணும்னு சொன்னாராம், உடனே  வழக்கறிஞர் சின்னம்மாவ கேட்டு சொல்கிறேன் என்றவர் அதன் பின் திரும்ப கூப்பிடவே இல்லையாம். வழக்கறிஞர் சசிகலாவிடம் தகவல் சொன்னபோது, தினகரன் அனுப்பி வைத்தாரா? என கேட்டாராம். இல்லை என்றதும் தங்க தமிழ்ச்செல்வனை சந்திக்க சசிகலா மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தங்க தமிழ்ச்செல்வன் சின்னம்மாவை பார்க்க பறப்பன ஆக்ராஹாராவில் இருக்கும் தகவல் தினகரனுக்குத் தெரிந்ததும், விவேக் மீது டென்ஷன் ஆன தினா  உடனடியாக பெங்களுரு புகழேந்தியை அனுப்பி தங்க தமிழ்ச்செல்வனை சென்னைக்கு கையேடு  அழைத்துவரச் சொல்லியிருக்கிறார்.