டைட்டிலை வாசித்ததும் வில்லங்கமாக எதையும் நினைக்க வேண்டாம். இது நல்ல விஷயம்தான். ஆம் உண்மையில் சசியும், ஜெயலலிதாவும் பாட்டியாகிட்டாங்க, கூடவே இளவரசியும்தான். யெஸ் இளவரசியின் மகன் விவேக்கிற்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது. 

சசியோட அண்ணன் பையனுக்கு பிள்ளை பிறந்தால் ஜெயலலிதா எப்படிங்க பாட்டி ஸ்தானத்துக்கு வருவார்? அப்படின்னு நீங்க கேட்கலாம். அந்த நெகிழ்ச்சியான பிணைப்பை விவரிக்கிறோம் கேளுங்க... சசிகலாவின் அண்ணன் ஜெயராமனின் குடும்பம் மன்னார்குடியில்தான் இருந்தது. மனைவி இளவரசி, கிருஷ்ணப்பிரியா மற்றும் ஷகிலா என இரு மகள்கள், மகன் விவேக் என்று சந்தோஷமான குடும்பம். 

இந்நிலையில், ஐதராபாத்தில் உள்ள ஜெயலலிதாவின் திராட்சை தோட்டத்தில் கட்டிட வேலை நடந்தபோது அதை சூப்பர்வைஸ் செய்து கொண்டிருந்த ஜெயராமன் ஷாக்கடித்து இறந்துவிட்டார். சசி, இளவரசியை விட இந்த விஷயத்தில் அதிகம் துக்கப்பட்டது ஜெயலலிதாதான். காரணம், மூன்று குழந்தைகளின் அப்பா இப்படி ஆகிவிட்டாரே! அதுவும் நம் வீட்டு வேலைகளால் என்றுதான். அதன் பிறகு இளவரசியை போயஸ் கார்டனுக்கே வரவைத்து தங்க வைத்தார் சசி மூலமாக. சிறு குழந்தைகள் இல்லாத அந்த வீடு, விவேக்கின் மூலமாக கலகலத்தது. விவேக்கை ஜெயலலிதா ‘பாய்’ என்றுதான் அழைப்பார். விவேக்கிற்கு பட்டம் விடுவதென்றால் கொள்ளை பிரியம். வீட்டு மொட்டை மாடியில் நின்று பட்டத்தை பார்க்கிறேன் என்று ஏறுவதும் இதைக்கண்டு இளவரசி, ஜெயலலிதா இருவரும் பயப்படுவதும் வாடிக்கை. 

ஜெயலலிதாவை விவேக் ‘பெரியத்தை’ என்று சொல்லித்தான் அழைப்பார். சசியை அத்தை அல்லது சின்னத்தை. இரண்டு பேரில் சசி மிகவும் கண்டிப்பு விவேக்கிடம். காரணம் சிறு பையனுக்கு எதுவும் நடந்துவிடக் கூடாது என்று. சசி கையில் எப்போதும் ஒரு கம்பு இருக்கும் விவேக்கை மிரட்ட. அதை தரையில் தட்டினாலே விவேக் நடுநடுங்கிவிடுவார். ஆனால் அதை வைத்து விவேக்கை அடிப்பதற்கு எந்த காலத்திலும் ஜெ., அனுமதித்ததில்லை. ‘சசி பாய்யை அடிக்காத’ என்று மிரட்டுவார். 

அதேபோல் விவேக்கிற்கு வெகு சில சமயங்களில் ஜெ., உணவு ஊட்டியதும் உண்டு. சாம்பாரில் இருந்து முருங்கைக்காய் துண்டை எடுத்து அதிலுள்ள சதையை தனது வலது கை பெருவிரலால் ஜெ., வழித்து விவேக்கிற்கு ஊட்டும் அழகே அழகு! என்று வேதா நிலையம் இல்லமே சிலிர்க்கும். விவேக்கிற்கு ஜெயலலிதா அளித்த முதல் பரிசு...பெரிய சைஸ் பட்டமான பானா காத்தாடி. 

விவேக் வளரவளர ஜெயலலிதாவின் நேரடி கவனத்தில் இருந்து நகர்ந்தார். காரணம் அதே வீட்டில் இருந்தால் செல்லம் கொடுக்கப்பட்டு கெட்டுப்போய்விடுவார் என்பதுதான். ஹாஸ்டலில் தங்கியிருந்தாலும் கூட விவேக்கின் மீது ஜெ.,வுக்கு ஒரு கண் எப்போதும் உண்டு. எம்.பி.ஏ. முடித்துவிட்டு வந்த விவேக்கிற்கு ஜாஸ் சினிமாஸ், ஜெயா டி.வி. குழுமம் ஆகியவற்றின் நிர்வாகத்தை ஜெயும், சசியும் கொடுத்து தைரியமாக களமிறக்கினர். சிறு வயதிலேயே பெரிய நிர்வாகம் வந்தது போல், மண வாழ்க்கையும் உடனடியாக அமைந்தது. 

விவேக்கின் திருமணத்துக்கு ஜெயலலிதா செல்வார் என்று அரசியல் அரங்கமே எதிர்பார்த்தது. ஆனால் சுதாகரன் திருமண விவகார்த்தில் பட்ட கஷ்டத்தால் முதல்வர் ஜெ., அங்கே போகலை. ஆனால் தாலி கட்டிய கையோடு மனைவியை அழைத்துக் கொண்டு நேரடியாக கார்டன் வீடு வந்து ஆசீர்வாதம் வாங்கினர் விவேக். ஜெயலலிதாவின் இறப்பும், சசிகலாவின் சிறை வாழ்க்கையும் விவேக்கை பெரிய அளவில் பாதித்தன. 

இந்த விவேக்கிற்குதான் இன்று மகள் பிறந்திருக்கிறாள். இந்த சேதி உடனடியாக பெங்களூரு சிறையிலிருக்கும் சசிக்கும், இளவரசிக்கும் தரப்பட்டதாம். சசி செம ஹேப்பியாம். விவேக்கை தன் குழந்தை போலவே ஜெ, கவனித்ததால் இன்று பாட்டியாகிவிட்டார் ஜெயலலிதா. விவேக்கிற்கு பெண் வாரிசு வந்த தகவல் ஆளும் அணி தரப்பிலும் மளமளவென பரவியது. ஏனோ முக்கியஸ்தர்கள் அப்செட்டாம். ஏன்? என்பதுதான் ராஜ ரகசியம்.