திமுக கூட்டணியில் ஆரணி தொகுதியில், காங்கிரஸ் சார்பில் போட்டியிடும், பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணியின் மைத்துனர் விஷ்ணுபிரசாத்தை தோற்கடிக்க ராமதாஸ் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

திமுக, கூட்டணியில், காங்கிரஸ் வேட்பாளராக, ஆரணி தொகுதியில், விஷ்ணு பிரசாத் போட்டியிடுகிறார். இவர், பாமக இளைஞரணி தலைவர், அன்புமணியின் மனைவி சவுமியாவின் அண்ணன்.  அதிமுகவுடன், பாமக, கூட்டணி வைத்ததும், ராமதாசையும், அன்புமணியையும், விஷ்ணு பிரசாத் கடுமையாக விமர்சனம் செய்தார். கூட்டணிக்கான பணபேரம் நடந்துள்ளது என்று பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். மைத்துனர் விஷ்ணுபிரசாத்தின் இந்த பேச்சு எனக்கும், எனது மனைவிக்கும் கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாக அன்புமணி வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

 

விஷ்ணு பிரசாத்தை எதிர்த்து அதிமுக வேட்பாளராக, ஏழுமலை போட்டியிடுகிறார். இந்த தொகுதி, பாமக, நிர்வாகிகள், சமீபத்தில், ராமதாசை சந்தித்த போது, 'விஷ்ணு பிரசாத்தை தோல்வியடைய செய்வது தான் முதல் வேலை. சொந்த பந்தம் எல்லாம் அப்புறம் தான். ஏழுமலை வெற்றிக்கு தீவிரமாக வேலை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

தனது மைத்துனரை ஆரணி தொகுதியில் தோற்கடிக்க வேண்டும் என ராமதாஸ் உத்தரவிட்டு இருப்பது அன்புமணிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அரசியல் என்று வந்து விட்டால் குடும்பம், செண்டிமெண்ட் எல்லாம் பார்க்கக்கூடாது என்கிற பாலிசியை கடைபிடிக்க ஆரம்பித்து இருக்கிறார் ராமதாஸ்.