மாப்பிள்ளை நான் தான்.. ஆனா போட்டு இருக்க சட்டை அவருடையது.. அமைச்சர் எம்.ஆர்.கேவை கிண்டல் செய்த விஷ்ணு பிரசாத்

 கடலூர் தொகுதியில் நிற்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும், தன்னை வெற்றிபெற செய்வதன் மூலமாக கடலூர் மக்களுக்கு நான் என்றும் சிறப்புடன் பணிபுரிவேன் என விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார். 
 

Vishnu Prasad said that I have surrendered to Minister MRK Panneerselvam and he should make me win KAK

வெற்றி வாய்ப்பு அதிகம்

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வகையில், கடலூரில் திமுக கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர் எம். ஆர்.கே பன்னீர்செல்வம், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன்,  விருத்தாச்சலம் சட்டமன்ற உறுப்பினர் நெடுஞ்செழியன்,  காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணுபிரசாத் கலந்துகொண்டனர் .

 

அப்போது, நிர்வாகிகள் மத்தியில் பேசிய விஷ்ணு பிரசாத், கடலூர் தொகுதியில் நிற்பது எனக்கு ஒரு மகிழ்ச்சியை கொடுத்துள்ளதாகவும், தன்னை வெற்றிபெற செய்வதன் மூலமாக கடலூர் மக்களுக்கு நான் என்றும் சிறப்புடன் பணிபுரிவேன் என் தெரிவித்தார்.  என்னோடு இருப்பது அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களும் இணைந்து இருப்பதால் எனக்கு மிகுந்தவெற்றி வாய்ப்பில் நம்பிக்கையுடன் இருப்பதாக கூறினார். அமைச்சரிடம் சரணடைந்து விட்டதாகவும், அவர் இல்லையென்றால் வேறு கதி எனக்கு இல்லையென கூறினார்.

Vishnu Prasad said that I have surrendered to Minister MRK Panneerselvam and he should make me win KAK

மாப்பிள்ளை நான் தான்...

இந்த தேர்தலில் கதாநாயகன், மாப்பிள்ளை நான் தான், ஆனால் போட்டு இருக்க சட்ட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் உடையது என தெரிவித்தார். இதன் காரணமாக கூட்டத்தில் சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், தோழமைக் கட்சிகளும் திமுகவினரும் காங்கிரஸ் கட்சியில் கை சின்னததில் நிற்கும் டாக்டர் விஷ்ணு பிரசாத்தை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் அதேபோல் சிதம்பரம் தொகுதியில் நிற்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அவர்களை பானை சின்னத்திலும் அதிகவாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

இதையும் படியுங்கள்

கள் குடியுங்கள்; டாஸ்மாக் வேண்டாம்: அண்ணாமலை தேர்தல் பிரசாரம்!
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios