Asianet News TamilAsianet News Tamil

இப்படியெல்லாம் பீதிய கெளப்புறீயே... வாக்குச் சீட்டு கொண்டாந்தா கள்ள ஓட்டை கன்னாபின்னான்னு குத்தி தள்ளிட மாட்டானுவலா?

கன்னியாகுமரியின் கடலோர கிராமங்களில், ஓட்டுச் சாவடிகளை கைபற்றி, காங்கிரஸுக்கு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன: பொன். ராதாகிருஷ்ணன்.

viral political comments on social media
Author
Chennai, First Published Apr 18, 2019, 3:23 PM IST

நூலிழையில் தப்பிப் பிழைத்த பிரகாஷ் ராஜ்: அட்மினின் வாய்க்கொழுப்பு அட்ராசிட்டிகள். 

*    கன்னியாகுமரியின் கடலோர கிராமங்களில், ஓட்டுச் சாவடிகளை கைபற்றி, காங்கிரஸுக்கு வலுக்கட்டாயமாக வாக்களிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன: பொன். ராதாகிருஷ்ணன்.

 (ஆமாமா, ‘ஓட்டுச் சாவடியில நாமதானே இருப்போம்! நான் சொல்றது புரியுதா?’ன்னு தில்லா, கெத்தாக உங்க கூட்டணி கட்சியின் பிரியமான தலைவர் அன்புமணி பேசுனதை பத்தி உங்களுக்கு எந்த தகவலும் வந்திருக்காதே மினிஸ்டர் சார்!)

viral political comments on social media

*    மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என நிபுணர்கள் நிரூபித்துள்ளனர். எனவே மீண்டும் ஓட்டுச் சீட்டு முறை வேண்டும்: சந்திரபாபு நாயுடு
(தல உன்னையெல்லாம் இந்த  தேசத்தோட ஹைடெக் தலைவன்னு சொல்லிட்டிருக்கோம். நீ என்னான்னா இப்படியெல்லாம் பீதிய கெளப்புறீயே. வாக்குச் சீட்டு கொண்டாந்தா கள்ள ஓட்டை கன்னாபின்னான்னு குத்தி தள்ளிட மாட்டானுவலா?)

viral political comments on social media

*    காங்கிரஸ் கூட்டணி, தமிழகத்தில் அத்தனை இடங்களிலும் வெற்றி பெறும். வயநாட்டில் ராகுல் போட்டியிடுவதால் அங்கே இளைஞர்கள் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்: உம்மன் சாண்டி 
(சாண்டி ஏட்டா அது கெடக்கட்டும், அந்த சரிதா புள்ள உங்கள பத்தி ஏதோ பத்த வெச்சுதே! அப்பல்லாம் வாயே திறக்காம  உம்முன்னு இருந்துட்டீங்களே! ஏன் தல?!)

viral political comments on social media

*    ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் உடனே முதல்வர் ஆகிடலாம் என்று கனவு கண்டார் ஸ்டாலின். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கட்டுக்கோப்பாக ஆட்சி நடத்துகிறார்: ஹெச்.ராஜா 

viral political comments on social media

(ஒரு காலத்துல, ஊழல் நிர்வாகம்! சட்ட ஒழுங்கு என்ன விலைன்னு கேட்கிற நிலைமை!ன்னு பேசுன வாய்தானே இது?! இருக்கட்டும் இருக்கட்டும் எலெக்‌ஷன் ரிசல்டுக்கு முன்னாடியோ, இல்ல எக்ஸிட் போல் ரிசல்ட் வந்ததுமோ உங்க அட்மின் என்னா வாய் பேசுறார்னு கவனிக்கிறோம்.)

Follow Us:
Download App:
  • android
  • ios