இன்றைய தேதிக்கு இந்தியாவில் கட்சி நடத்திட கொள்கையோ, சித்தாந்தங்களோ, தியாகங்களோ தேவையில்லை. கன்னாபின்னான்னு கரன்ஸி, கலர்ஃபுல்லாக ஒரு டி.வி.சேனல், கடனேன்னு விற்க ஒரு செய்தித்தாள்! இவை ரொம்ப்ப்ப்ப முக்கியம். 

தமிழகத்தின் முக்கிய கட்சிகள் அத்தனையுமே கிட்டத்தட்ட இவற்றை வைத்திருக்கும் நிலையில், ஆளும் அணியின் கையில் மட்டும் சொந்தமாக மீடியா இல்லாமல் இருந்தது. திடீர்ன்னு இந்த யோசனை முளைக்க, நான்கைந்து மாண்புமிகுக்கள் சேர்ந்து பிளான் போட்டு பரபரன்னு ஒரு செய்தித்தாளையும், சேனலையும் கொண்டு வந்துவிட்டனர். 

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சூடான சேனலின் முக்கிய தலைகளுக்கு போன் போட்டாராம் ஆளும் அணியின் தலைநகர் வி.ஐ.பி. ஒருவர். இந்தப் பட்டாளமும், சொன்ன இடத்துக்கு சொன்ன நேரத்துக்கு அரைமணி நேரம் முன்பாகவே ஆஜராகினர். அது சிட்டியின் பரபரப்பான வீதியிலுள்ள நட்சத்திர ஹோட்டல். 

லட்சக்கணக்கான பணத்தில் இண்டீரியர் டெக்கரேஷன் செய்திருந்தாலும் கூட, வெளிச்சத்தை விரும்பாத அரையிருட்டுப் பகுதி அது. காஸ்ட்லி காரில் வந்திறங்கிய வி.ஐ.பி, சேனல் நபர்களை அழைத்து அந்த அரையிருட்டில்தான் சந்தித்தார்.

அடிப்படையில் அந்த வி.ஐ.பி. ஒரு மிகப்பெரிய ‘ஜொள்ளர்’ என்பதால், சந்திக்கப்போன கோஷ்டியில் ஒரு விவரமான புள்ளி, சன்னமான இருட்டிலும் கூட தெளிவாய் வீடியோ செய்யும் உளவு சாதனமொன்றை கையோடு எடுத்துச் சென்றிருக்கிறார். ஆனால் வீடியோ எடுக்கும் வகையில் சாதனத்தை எங்கும் பொருத்த முடியவில்லை, எனவே தீர்த்தங்கள் பரிமாறப்பட்ட டேபிளின் அடியில் ஒட்டிவிட்டார். வீடியோ சிக்கலேன்னாலும், ஆடியோவாச்சும் கிடைச்சா சரி! என்பது கணக்கு. 

ஆளும் அணியின் முக்கியஸ்தர்கள் சிலரைப்பற்றி நிச்சயம் இந்த வி.ஐ.பி. ஏதோ ஒரு உண்மையை சொல்லப்போகிறார்! என்பதே இவர்களின் எதிர்பார்ப்பு. காரணம், தேஜஸான அந்த நபர் நெடுநாட்களாக அமைச்சர் பதவிக்கு அடிபோட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் அது நடப்பதாக இல்லை. எனவேதான் ஏதோ ஒரு அமைச்சரின் ரகசியத்தை உடைத்து, இவர் முன்னேற அடிபோடுகிறார்! என்று நினைத்தனர். 

சந்திப்பு சம்பிரதாயமாக துவங்கி, இரண்டு மூன்று ‘ரவுண்டுகள்’ போனதும், ஏகாந்த மூடில் தனது அருமை பெருமைகளை செப்ப துவங்கிய வி.ஐ.பி., நகரின் முக்கிய தளங்களில் உள்ள மிக முக்கிய பெண்மணிகள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு, இவங்களெல்லாம் எனக்கு தோழிகள்தான். அவங்க விருப்பப்பட்டால், பட்டினப்பாக்கத்துல துவங்கி, பட்டாயா வரைக்கும் எங்கேயும் எப்போ வேணா போயிட்டு வருவோம்...என்றெல்லாம் கில்மா கொப்பளிக்கப் பேசியவர், ஒரு கட்டத்தில் இந்த தோழிகளையெல்லாம் தனக்கு அறிமுகம் செய்து வைத்தவர் யார் தெரியுமா? என்று கேட்டு...எதிர்கட்சியின் ஒரு மிக முக்கிய நடுத்தர வயது நபரை சொல்லியிருக்கிறார். அது உண்மை என்பதை நிரூபிக்க, அவரோடு தான் இருக்கும் போட்டோவையும் காட்டியிருக்கிறார். அதிர்ந்து போனார்கள் சேனல் நண்பர்கள். 

அதன் பின்னும் சுமார் இரண்டு மணி நேரமாக தனது ஜொள்ளு கதையை லொள்ளு குறையாமல் விளக்கியவர் பின் லேசாக மட்டையாகிவிட்டாராம். வெளியே வந்த சேனல் டீம் நேரடியாக அலுவலகம் போயி அந்த ஆடியோவை மீண்டும் மீண்டும் போட்டு கேட்டுப்பார்த்திருக்கின்றனர். தெளிவாக விழுந்திருக்கிறது எதிர்கட்சி முக்கியப்புள்ளியின் பெயர். ‘இவன் தாண்டா எனக்கு எல்லாமே! யாரை வேணா அறிமுகப்படுத்துவான்’ என்று ஆளும்கட்சி வி.ஐ.பி. அரை மயக்கத்தில் உளறுவதும் பதிவாகியுள்ளது. 

இந்த ஆடியோ மட்டும் வெளியே வந்தால் எதிர்கட்சி மானம் ஆடிக்காற்றில் சிக்கிய பாணா காத்தாடியாகிப்போகும்! என்பதால் சேனல் நண்பர்கள் அப்படியே அமுக்கிவிட்டனர். 
ஆனாலும், ஒரு நாள் இல்லாட்டி ஒரு நாள் இந்த ஆடியோ நிச்சயம் ஒரு பிரளயத்தை கிளப்பும்! என்று மர்மமாய் சிரிக்கிறார்கள்.