Asianet News TamilAsianet News Tamil

வாக்கு எண்ணிக்கை தொடங்கியது: தமிழகத்தின் விஐபி வேட்பாளர்கள் ஒரு பார்வை

தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், விஐபி வேட்பாளர்கள் தொகுதிகள் குறித்த ஒரு பார்வை.
 

vip candidates list in tamil nadu
Author
Chennai, First Published May 2, 2021, 8:29 AM IST

தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ம் தேதி நடந்தது. தமிழகம், கேரளா, அசாம், மேற்குவங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கும் நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது. சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடந்துவருகிறது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், டிடிவி தினகரன், உதயநிதி ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், மநீம சார்பில் போட்டியிடும் ஸ்ரீப்ரியா, பழ கருப்பையா, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக சார்பில் குஷ்பு, அண்ணாமலை, எச்.ராஜா ஆகியோர் போட்டியிடும் தொகுதிகள் விஐபி தொகுதிகளாக பார்க்கப்படுகின்றன. அவர்கள் போட்டியிடும் தொகுதிகளை பார்ப்போம்.

எடப்பாடி தொகுதி - அதிமுக: எடப்பாடி பழனிசாமி, திமுக - சம்பத்

கொளத்தூர் தொகுதி - திமுக: மு.க.ஸ்டாலின், அதிமுக: ஆதிராஜாராம்

போடி தொகுதி - அதிமுக: ஓபிஎஸ், திமுக: தங்க தமிழ்ச்செல்வன்

கோவை தெற்கு - பாஜக: வானதி ஸ்ரீநிவாசன், மநீம: கமல்ஹாசன்

கோவில்பட்டி - அதிமுக: அமைச்சர் கடம்பூர் ராஜூ, அமமுக: டிடிவி தினகரன், சிபிஎம் - சீனிவாசன்

காரைக்குடி - பாஜக: எச்.ராஜா, அமமுக: தேர்போகி பாண்டி

திருவொற்றியூர் - நாம் தமிழர்: சீமான், திமுக: சங்கர்

மயிலாப்பூர் - மநீம: ஸ்ரீப்ரியா, அதிமுக - நட்ராஜ், திமுக: த.வேலு

சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி - திமுக: உதயநிதி ஸ்டாலின், பாமக - கஸ்ஸாலி

ஆயிரம் விளக்கு - பாஜக: குஷ்பு, திமுக - எழிலன்

தி.நகர் - மநீம: பழ கருப்பையா, திமுக: கருணாநிதி, அதிமுக: சத்யா

அரவக்குறிச்சி - பாஜக: அண்ணாமலை ஐ.பி.எஸ், திமுக: இளங்கோ

தொண்டாமுத்தூர் - அதிமுக: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, திமுக: கார்த்திகேய சிவசேனாபதி

விருத்தாச்சலம் - தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த், பாமக: கார்த்திகேயன், காங்கிரஸ்: ராதாகிருஷ்ணன்
 

Follow Us:
Download App:
  • android
  • ios