சவால் விட்ட அமைச்சர் விஜயபாஸ்கர் தனது பதவியை எப்போது ராஜினாமா செய்யப்போகிறார் என அரவக்குறிச்சி எம்.எல்.ஏ செந்தில்பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரவக்குறிச்சியில் திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி உள்ளூர் அமைச்சரான விஜயபாஸ்கர் கடும் முயற்சிகளை மேற்கொண்டார்.  ஆனால் செந்தில்பாலாஜி அனைத்தையும் கடந்து வெற்றி பெற்றார். திமுக, அதிமுக, அமமுக என அனைவரும் பணத்தை வாரி இறைத்ததாக கூறப்பட்டது. பிரச்சாரத்தின்போது, அதிமுக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்ட போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ’செந்தில் பாலாஜியை டெபாசிட் இழக்க செய்வேன். இல்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்’ என சவால் விட்டார்.

இந்நிலையில் நேற்று வெற்றி பெற்றவுடன் செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியபோது, "என்னை டெபாசிட் இழக்க செய்வேன், இல்லை என்றால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று அமைச்சர் சொன்னாரே, எப்போது ராஜினாமா செய்வார்?  என கேள்வி எழுப்பினார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார் அமைச்சர் விஜயபாஸ்கர்.