தமிழக காங்கிரஸ் கட்சித்தலைவராக பொறுப்பேற்ற பின்னர் திருநாவுக்கரசர் அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து வருகிறார். இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சியை பொறுப்போடு வழி நடத்தி செல்வதாக அனைவரும் பாராட்டுகின்றனர். காங்கிரஸ் கட்சிக்கு கவுரவத்தை அளிக்கும் விதத்தில் கூட்டணி கட்சி கருத்துக்கு உடன்பட வேண்டும் என்றில்லாமல் காங்கிரஸ் கட்சியின் கருத்தை ஆணித்தரமாக தெரிவித்து வருகிறார்.

அதே போல் காங்கிரஸ் தலைமையில் வெற்றிகரமாக உண்ணாவிரத்தையும் கோஷ்டி தலைவர்களை ஒருங்கிணைத்து நடத்தி மேலிடத்தில் நல்ல பெயர் வாங்கியிருக்கிறார். மற்றொரு புறம் மாற்று கட்சித்தலைவர்களை சந்த்தித்து வருகிறார். அந்த வகையில் இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அவருக்கு சால்வை அணிவித்து விஜயகாந்த் வரவேற்றார்.

சிறிது நேரம் இருவரும் தனிமையில் பேசிகொண்டிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துவிட்டு திருநாவுக்கரசர் புறப்பட்டு சென்றார்.