இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருந்தபோது மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு எப்பொழுதெல்லாம் அகவிலைப்படி வழங்குகிறதோ அதே தேதியிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி வழங்க வேண்டும் என்று நிரந்தர உத்தரவை பதிவு செய்துள்ளார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கிய போதெல்லாம், தமிழக அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருவது நடைமுறையாக உள்ளது.

பத்து மாதங்கள் கடந்தும் தமிழக அரசு ஊழியர்களுக்கான 7-வது சம்பள குழு பரிந்துரையின் படி ஊதியம் வழங்கப்படவில்லை, சம்பள குழு பரிந்துரை நடைமுறைபடுத்துவதில் தாமதம்ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.

7-வது சம்பள குழு பரிந்துரை அமல்படுத்துவதில் காலதாமதமானால் இடைக்கால நிவாரணம் கூட வழங்காமல், எந்த அறிவிப்பும் வெளியிடப்படாமல் உள்ளது.


வரும் பொங்கல் பண்டிகைக்குள் ஏழாவது ஊதிய குழு பரிந்துரையின் படி பணப்பயனையும் 1.7.2016 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும்.

மேலும் காலதாமதம் செய்தால் இந்த அரசு தன்விரல் கொண்டு கண்களை குத்திக்கொள்வது போல் ஆகும் என விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.