Asianet News Tamil

மிஸ்டர் இ.பி.எஸ்., ச்சும்மா சொல்லிட்டே இருக்காதீங்க. செஞ்சு காட்டுங்க: விஜயகாந்த் அட்வைஸ்!

*குழந்தைகளுக்கு உணவளிப்பது தேசத்தின் எதிர்காலத்துக்கு உணவளிப்பதற்கு சமம். ஆரோக்கியமான குழந்தைகள், படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவர். 

Vijaykanth's strong advice to E.P.S: Dont tell! do!
Author
Chennai, First Published Feb 18, 2020, 6:28 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

*குழந்தைகளுக்கு உணவளிப்பது தேசத்தின் எதிர்காலத்துக்கு உணவளிப்பதற்கு சமம். ஆரோக்கியமான குழந்தைகள், படிப்பதிலும், புரிந்து கொள்வதிலும் சிறப்பாக செயல்படுவர். குழந்தைகளின் உடல் வளர்ச்சியிலும், அறிவு வளர்ச்சியிலும், சத்தான உணவு முக்கிய பங்காற்றுகிறது. காலை உணவை தவிர்த்தால், தலைவலி மற்றும் படிப்பில் கவனமின்மை ஏற்படும் என அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 
-பன்வாரிலால் புரோஹித் (தமிழக கவர்னர்)

*இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதற்காக, அந்த நாட்டு ராணுவ தளபதி ஷாவேந்திர சில்வா அமெரிக்காவினுள் நுழைவதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. இதற்கு இலங்கை அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாவும், அவர்களுக்கு மருத்துவ மற்றும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கவிடாமல் செய்ததாகவும் சில்வா மீது குற்றச்சாட்டு உள்ளது. -பத்திரிக்கை செய்தி

*முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழிகாட்டுதலின்படி செயல்படும் எங்கள் அரசு, அனைத்து துறைகளிலும் மிக சிறப்பாக செயலாற்றி வருகிறது. குறிப்பாக, விவசாயிகளை பாதுகாக்க பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.-காமராஜ் (தமிழக உணவுத்துறை அமைச்சர்)

*தகுதி நீக்க வழக்கில் உள்ள பதினோறு எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பத்தாவது முறையாக பட்ஜெட் வாசித்துள்ளார். இந்த பட்ஜெட் யாருக்கும் பத்தாத பட்ஜெட்டாக உள்ளது. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 159 நிமிடங்கள் வாசித்தார். இந்த பட்ஜெட்டை பன்னீர்செல்வம் 196 நிமிடங்கள் வாசித்தார். இதில் கூட மத்திய பாரதிய ஜனதா அரசை  அ.தி.மு.க. அரசு பின்பற்றுகிறது. -மு.கஸ்டாலின் (தி.மு.க. தலைவர்)

*மானியம் இல்லாத சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ஒரே நாளில் 147 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், கோபத்தையும் உருவாக்கியுள்ளது. விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் கம்யூனிஸ்ட் இயக்கம் சார்பில் பெரும் போராட்டங்கள், மக்களை திரட்டி நடத்தப்படும். -பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் மாநில செயலாளர்)

*குஜராத் வரும் டிரம்பிடம் இருந்து குடிசைப் பகுதிகளை மறைக்க, சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. வறுமையை ஒழிப்பதற்கு பதில், ஆளுங்கட்சி சுவர் எழுப்பி ஏழை மக்களை மறைக்கிறது. இது 25 ஆண்டுகலாக பா.ஜ.க. ஆட்சி புரியும் குஜராத்தில் வறுமை பன்மடங்கு அதிகரித்துள்ளதை காட்டுகிறது. -மனிஷ் தோஷி (காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்)

*வருமான வரித்துறையின் அ.தி.மு.க.வினர் வீடுகளில் கூடத்தான் சோதனை நடத்தினர். அதற்காக குற்றம் சாட்ட முடியுமா? வருமான வரித்துறை தன்னாட்சி பெற்ற அமைப்பு.  அதில் அரசியல் தலையீடு கிடையாது. ரஜினிக்கு சமமான ஒரு நடிகர் உண்டென்றால் அது அஜித் ஒருவர்தான். இருவரும் ஜல்லிக்கட்டு காளைகள். இதில் ரஜினி மலை, அஜித் தல. -ராஜேந்திர பாலாஜி (பால்வளத்துறை அமைச்சர்)

*குற்றவாளிகளுக்கான தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது ஏற்கனவே இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டுவிட்டது. தற்போது மூன்றாவது முறையாக வாரன்ட்  பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்து, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களின் நீண்ட நாள் சட்டப்போராட்டம், விரைவில் முடிவுக்கு வருமென நம்புகிறேன். - ஆஷா தேவி (நிர்பயாவின் அம்மா)

*காங்கிரஸ் கட்சி வன்முறைகளில் ஈடுபடுவோருக்கும், சமூக விரோதிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது. நாட்டிற்காக சேவை புரியும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும், காவல் துறையினருக்கும் எதிராக குரல் கொடுத்து வருகிறது. 
-நரசிம்ம ராவ் (பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர்)

*தமிழக பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள், மக்களுக்கு நேரடியாகச் செல்ல, சொல் வடிவில் இல்லாமல் செயல் வடிவமாக இருக்க வேண்டும்.  இந்த பட்ஜெட்தான் இந்த அரசின் இறுதி பட்ஜெட். எனவே இதன் மூலம், தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எல்லா நலன்களும், வளங்களும் கிடைக்க வேண்டும். -விஜயகாந்த் (தே.மு.தி.க. தலைவர்)

Follow Us:
Download App:
  • android
  • ios