தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு நேற்று பிறந்தநாள் . அதை முன்னிட்டு வேலூர் மாவட்டம் உமராபாத் பகுதியில்   நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற அவரது மகன் விஜய பிரபாகரன் பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான தையல் இயந்திரங்கள், சலவைப் பெட்டிகளை வழங்கினார். 

பின்னர் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய விஜய பிரபாகரன் , தனது தந்தை விஜயகாந்தின் உடல்நிலை மிக நன்றாக இருப்பதாக தெரிவித்தார் . வருகிற தை மாதத்திற்கு பின் அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் கூறினார் .

மேலும் பேசிய அவர் தனது தந்தையின் உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரப்படுவதாகவும் அது எதுவும் உண்மை இல்லை என்று தெரிவித்தார் . அத்தனை அவதூறு செய்திகளையும் தாங்கிக்கொண்டு தனது தாயார் பிரேமலதா விஜயகாந்த் கட்சியை திறம்பட வழி நடத்தி வருவதாக பேசினார் .

விஜயகாந்தின் உடல்நிலை குறித்து பேசும்போது விஜய பிரபாகரன் உணர்ச்சிவசப்பட்டு காணப்பட்டார் .