தமிழக அரசியலில் திடீர் திருப்பம்... மோடி மேடையில் விஜயகாந்த்- ஜி.கே.வாசன் படம் நீக்கம்..!

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் படமும் அகற்றப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vijayakanth vasan photos remove

பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் படமும் அகற்றப்பட்டுள்ளதால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவுடன் கூட்டணியை இன்று விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று விஜயகாந்த் தனது கட்சி நிர்வாகிகளுடன் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தினார். அவர் முக்கிய முடிவை அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்று விட்டார். vijayakanth vasan photos remove

பின்னர், தேமுதிகவுடனான இழுபறி குறித்து அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார். இதனிடையே விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைவது குறித்து கேட்டபோது ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது என்று பியூஷ் கோயல் கூறினார். தேமுதிக தலைவர்கள் தன்னை சந்திக்கவிருக்கிறார்கள். தேமுதிகவுடன் கூட்டணி உறுதி என துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்தார். ஆனால், தேமுதிக தரப்பில் கூட்டணி குறித்து இதுவரை பதிலளிக்கவில்லை. vijayakanth vasan photos remove

இதனையடுத்து பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் விஜயகாந்த், வாசன் புகைப்படங்கள் இடம் பெற்றதால் அதிமுக-பாஜக கூட்டணியில் தேமுதிக சேருவது உறுதி என தகவல் வெளியாகின. மேலும் சென்னை விமான நிலையம் அருகே தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோருடன் தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூட்டணி பற்றி ஆலோசனை நடத்தி வரும் நிலையில் திமுக பொருளாளர் துரை முருகனை அவரது வீட்டில் தேமுதிக நிர்வாகிகள் சந்தித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 vijayakanth vasan photos remove

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்ட மேடையில் இருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் வாசன் ஆகியோர் படமும் அகற்றப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios