நாகப்பட்டினம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து மயிலாடுதுறையை, தனி மாவட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்போகிறார் என அந்த மாவட்ட தே.மு.தி.க நிர்வாகிகள்  தலைமைக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். 

 காரணம், தென்காசி, செங்கல்பட்டு மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டபோதே கும்பகோணம் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்தை பிரித்து தர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அந்தக் கோரிக்கை விரைவில் பரிசீலிக்கப்படும் என வெளிப்படையாகவே அறிவித்து இருந்தார் எடப்பாடி பழனிசாமி. 

இதனடிப்படையிலேயே தேமுதிகவினர் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிக்கப்போவதாக தகவல் கொடுத்துள்ளானர். உடனே விஜயகாந்தும், 'மயிலாடுதுறையை புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்' என அறிக்கை வெளியிட்டார். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததும், தன் கோரிக்கையை ஏற்றுக் கொண்டதாக சொல்லிக் கொள்ளலாம் என விஜயகாந்த் கணக்கு போட்டிருக்கிறார். ஆனால், யாருமே எதிர்பாராத விதமாக வேலுாரை மூன்று மாவட்டங்களாக பிரித்து முதல்வர் அறிவித்து விட்டார். இதனால் நாம் நினைத்தது நடக்கவில்லை என  விஜயகாந்த் நொந்து போய் விட்டதாகக் கூறுகிறார்கள்.