vijayakanth in treatment at singapore chennai high court cancel warrant

தேமுதிக., தலைவர் விஜயகாந்த் மீது பிறப்பிக்கப் பட்ட பிடிவாரண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் அவர் மீது பிறப்பித்த பிடி வாரண்டை ரத்து செய்தது.

பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பான வழக்கில் விஜயகாந்த் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. எனவே, நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாததால், தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது ஆலந்தூர் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது. 

இதனிடையே விஜயகாந்த் உள்ளூரில் இல்லாமல், உடல் நலக் கோளாறு காரணமாக சிங்கப்பூரில் சிகிச்சை மேற்கொள்ள சென்ற வாரம் சென்றிருந்தார். இந்நிலையில், நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டது. எனவே, பிடிவாரண்ட் பிறப்பிக்கப் பட்டதை எதிர்த்து, விஜயகாந்த் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், விஜயகாந்த் மீதான பிடிவாரன்ட்டை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப் பட்டது. 

உடல் நலக்குறைவு காரணமாக வெளிநாட்டில் (சிங்கப்பூரில்) விஜயகாந்த் சிகிசையில் உள்ளார் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்ற நீதிமன்றம், ஆலந்தூர் நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட்டை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது.

இதனிடையே, விஜயகாந்த் சிங்கப்பூரில் சிகிச்சை பெறும் நிலையில் உள்ள புகைப்படம் வெளியானது. மருத்துவ மனைக்கு உரிய உடையுடன் விஜயகாந்த் நின்றிருக்கும் புகைப்படத்தைக் கண்ட அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.