Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்துக்கு எதிராக அவதூறு வழக்கு !! எடப்பாடி பழனிசாமி அதிரடி வாபஸ் !!

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற்றது.

vijayakanth case edappadi  decision
Author
Chennai, First Published Dec 3, 2019, 8:39 PM IST

2005 ல் கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006ல் சட்டமன்ற தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டு ஒரே தொகுதியில் மட்டும் பெற்றி பெற்றார். 2009 மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளில் நின்று அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழன்ந்தாலும் 10.8 சதவீத வாக்குகளை தேமுதிக பெற்றது.

2011 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை தேமுதிக கைப்பற்றியது. ஆனால் அதன் பிறகு ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்த்துக்கும் நேரடியாக மோதல் ஏற்பட்டது.

vijayakanth case edappadi  decision

இதையடுத்து 2016 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை. 

அதே நேரத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், கடந்த 2012 முதல் 2016  வரை அப்போது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவையும், தமிழக  அமைச்சர்களையும் அவதூறாக பேசியதாக தமிழக அரசு சார்பில்  5 அவதூறு வழக்குகள் போடப்பட்டன. இந்த வழக்குகள் நடந்து கொண்டிருந்த நிலையில்  ஜெயலலிதா மறைந்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆட்சி தொடர்ந்து நடைபெற்று வருகிற்து.

vijayakanth case edappadi  decision

இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 

vijayakanth case edappadi  decision

இதனைடையே விஜயகாந்த் மீதான அவதூறு  வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,  சிறப்பு நீதிமன்ற நீதிபதி முன், விஜயகாந்த் மீதான 2 வழக்குகளை திரும்ப பெறுவதாக அரசு தரப்பு தெரிவித்தது. அரசு விளக்கத்தையடுத்து 2013, 2014 ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளை நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios