Asianet News TamilAsianet News Tamil

ஒரு கோடி ரூபாயை வாரிக்கொடுத்த விஜயகாந்த்... அஜீத், கமல், ரஜினியை அடித்துத் தூக்கிய கேப்டன்

 உடல் நலக்குறைவுக்காக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டிய நிலையிலும், மக்களின் துயர் துடைக்கும் நல்லெண்ணத்தில்  கஜா புயலுக்காக ஒரு கோடியை நிவாரண நிதியாக அறிவித்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.

vijayakanth announces rs.one crore to gaja relief fund
Author
Chennai, First Published Nov 21, 2018, 12:13 PM IST

 உடல் நலக்குறைவுக்காக மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவேண்டிய நிலையிலும், மக்களின் துயர் துடைக்கும் நல்லெண்ணத்தில்  கஜா புயலுக்காக ஒரு கோடியை நிவாரண நிதியாக அறிவித்திருக்கிறார் கேப்டன் விஜயகாந்த்.vijayakanth announces rs.one crore to gaja relief fund

கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டுவருகிறார் கேப்டன் விஜயகாந்த். அவரால் தனது கட்சி அலுவலகத்துக்குச் சென்று தொண்டர்களுடன் சகஜமாக உரையாடமுடியாத நிலை. இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை எடுத்து வந்த விஜயகாந்த் இன்னும் ஓரிரு தினங்களில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்லவிருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்திருந்தனர். 

இந்நிலையில் கஜா புயலின் கோரதாண்டவம் குறித்து விசாரித்த அறிந்த விஜயகாந்த், வழக்கம்போல் பெரிய மனதுடன் ஒருகோடி ரூபாயை நிவாரண நிதியாக அறிவித்துள்ளார். எதிர்க்கட்சியான தி.மு.க.வே ஒரு கோடிதான் அறிவித்திருக்கும் நிலையில் விஜயகாந்தின் ஒரு கோடி அறிவிப்பு மக்கள் மத்தியில் கேப்டன்னா கேப்டன்தான்யா என்று சொல்லவைத்திருக்கிறது.vijayakanth announces rs.one crore to gaja relief fund

இன்னொரு பக்கம் திரையுலகில் குடும்பத்துடன் கோவா சென்றிருக்கும் அஜீத் இன்னும் ஒரு துக்க விசாரிப்பு செய்தி கூட அனுப்பவில்லை. விஜய் ரசிகர் மன்றத்தினரோ தளபதி என்னோட அக்கவுண்டுக்கு பணம் அனுப்பி உதவச்சொன்னார் என்று பூச்சாண்டி காட்டிக்கொண்டிருக்கிறார்கள். ரஜினியோ நிவாரண நிதியாக பணம் கொடுக்காமல் 50 லட்சத்துக்கு பொருட்கள் அனுப்பப்படும் என்கிறார். அது கல்யாண மண்டபத்துக்கு வந்து சேரவிருக்கும் பொருட்களா? கமல் விரைவில் அங்கு வரப்போகிறேன்’ என்று வாய்தா கொடுத்துக்கொண்டிருக்கிறார் எனும் நிலையில் வழக்கம்போல் அடித்து ஆடிவிட்டார் கேப்டன்.

Follow Us:
Download App:
  • android
  • ios