தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் மருத்துவ சிகிச்சைக்காக கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று  நன்கு குணமடைந்தார். இதையடுத்து அங்கிருந்து பல புகைப்படங்களை அனுப்பியிருந்தார்.

அவர் அமெரிக்காவில் இருநதபோது தான்  கடந்த 7-ம் தேதி தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக காலமானார். கருணாநிதியின் இறுதி அஞ்சலி நிகழ்சியில் நேரில் பங்கேற்க இயலாத விஜயகாந்த் அவரது மறைவிற்கு கண்ணீர் மல்க வீடியோ மூலம் இரங்கல் தெரிவித்தார். இதையடுத்த கடந்த 20 ஆம் தேதி விஜயகாந்த் அமெரிக்காவில் இருந்து தமிகழம் திரும்பினார். நேராக கருணாநிதியின் சமாதிக்கு சென்ற அவர் மலர் தூவி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

இதைத் தொடர்ந்து கடந்த வாரம் அவர் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இந்நிலையில் இன்று இரவு 8 மணியளவில் அவருக்க திடீர் என மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது இளைய மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் மருத்துவமனையில் உள்ளனர்