Asianet News TamilAsianet News Tamil

வசமாக சிக்கிய விஜயபாஸ்கர்.. விசாரணைக்கு ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்.. அதிர்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி.

அதில் பணம், மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 25 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அவரிடமிருந்து கைப்பற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை ஆராய்ந்து தகவல் திரட்டி வருகின்றனர். 

Vijayabaskar trapped  .. DVAC Department summoned to appear for investigation .. Edappadi Palanichamy in shock.
Author
Chennai, First Published Sep 29, 2021, 9:27 AM IST

முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் வரும் 30 ஆம் தேதி நேரில் ஆஜராக லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இது அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் அவரது வீடு மற்றும் அவரது உறவினர்கள் இல்லமான பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையடுத்து இந்த சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியின்போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்  விஜயபாஸ்கர் இவர் அமைச்சராக இருந்தபோது தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. முன்னதாக தேர்தல் வாக்குறுதியளித்திருந்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அதிமுக ஆட்சிகாலத்தில் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். 

Vijayabaskar trapped  .. DVAC Department summoned to appear for investigation .. Edappadi Palanichamy in shock.

அதேபோல திமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர்களை குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜூலை மாதம் 22ஆம் தேதி கரூரில் உள்ள எம்.ஆர் விஜயபாஸ்கர் வீடு அலுவலகம் மற்றும் அவரது சொந்தமான நிறுவனங்களில் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடு என மொத்தம் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அதில் பணம், மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், 25 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், அவரிடமிருந்து கைப்பற்ற ஆவணங்களை அடிப்படையாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அந்த ஆவணங்களை ஆராய்ந்து தகவல் திரட்டி வருகின்றனர். இந்நிலையில் அந்த ஆவணங்கள் தொடர்பான வரும் 30 ஆம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் மீது வழக்கு பதிவு செய்த கரூர் லஞ்ச ஒழிப்பு பிரிவு டிஎஸ்பி முன்னிலையில் அல்லது சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை தலைமையகத்தில் அவர் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. 

Vijayabaskar trapped  .. DVAC Department summoned to appear for investigation .. Edappadi Palanichamy in shock.

அதன் அடிப்படையில் ஒரு 30ஆம் தேதி சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அலுவலகத்தில் எம்ஆர் விஜயபாஸ்கர் நேரில்  ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பி இருப்பது அதிமுக தலைமை, அவரது ஆதரவாளர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios