சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொரோனா நிவாரணமாக உதவி பொருட்களை வழங்கி வருகிறார். அந்தப்புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி வருகிறது.

 

அந்த உதவிபொருட்களை வழங்கும் பைகளில் அமைச்சர் விஜயபாஸ்கரின் புகைப்படம் ஒட்டப்பட்டுள்ளது. அதற்கு கீழ் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரும் இடம்பெற்று இருக்கிறது. இந்நிலையில் அந்தப்புகைப்படங்களை சித்தரித்து  ’நாளைய முதல்வர் விஜயபாஸ்கர்’என திமுகவினர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதனை உணராத அதிமுக கீழ் மட்டத்தொண்டர்கள் அதிர்ச்சியாகி வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து விளக்கியுள்ள அதிமுக தரப்பு, ஒரிஜினல் - சித்தரிக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களையும் வெளியிட்டு உண்மையை உணர்த்தி வருகிறது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பலரும் தங்களது கருத்துக்களைவெளியிட்டு வருகின்றனர்.