அப்பாவை வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த மகன் விஜய பிரபாகரனிடம், இப்படியே போய்ட்டு இருந்தால், கட்சியை யாரு கவனிக்கிறது?’ கவலையோடு கேட்ட  விஜய்காந்த்திடம், ‘நீங்க போய்ட்டு வாங்கப்பா... நான் பார்த்துக்குறேன். தமிழ்நாடு முழுக்க 234 தொகுதிகளிலும் நாம பூத் கமிட்டி அமைக்கணும். அதுக்கான வேலைகளை உடனே தொடங்கச் சொல்லிடுறேன். அதை நானே உடன் இருந்து கவனிச்சுக்குறேன்.’ என மகனின் அந்த பேச்சு விஜயகாந்த்தை மெய் சிலிர்க்க வைத்ததாம்.

அதேவேகத்தில் வந்த விஜய பிரபாகரன், தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் எல்லோருக்கும் பிரபாகரனே போன் போட்டிருக்கிறார். ‘நான் விஜய பிரபாகரன் பேசுறேன்... அப்பா பூத் கமிட்டி அமைக்கிற வேலையை பார்க்க சொல்லியிருக்காரு, நாம உடனே ஆரம்பிக்கணும் அதற்கான வேலையை தொடங்கிடுங்க. இது சம்மந்தமா நீங்க என்னை எப்போ வேணாலும் கூப்பிட்டு ரிப்போர்ட் பண்ணலாம்...’ என்று சொல்லி இருக்கிறார். 

அதுமட்டுமல்ல, தினமும் போன் செய்து ரிப்போர்ட் செய்யாத மாவட்ட செயலாளர்களுக்கு அவரே போன் போட்டு, ‘ இனி நீங்க இப்படி இருந்தால் உங்களையே மாற்ற வேண்டி இருக்கும்..’ என எச்சரித்தாராம். விஜய பிரபாகரனின் இந்த அதிரடியால்  தேமுதிகவின் மாவட்டச் செயலாளர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள்.

இளைஞர் அணி பொறுப்பு தற்போது முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பியிடம் இருக்கிறது. அந்தப் பொறுப்பை பிரபாகரனிடம் வழங்க வேண்டும் என்ற குரல் இப்போது தேமுதிகவில் உள்ள சில நிர்வாகிகள் மத்தியில் கேட்க ஆரம்பித்திருக்கிறது. சுதீஷின் கோஷ்டி அரசியல் தெரிந்த விஜய பிரபாகரன் அவரை ஒதுக்கி விடவே களத்தில் குதித்துள்ளதாக தேமுதிக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.