அதிமுக, கூட்டணியில், பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட 7 தொகுதிகள் கொடுத்துள்ளதது. அடுத்ததாக தேமுதிகவைச் சேர்க்க, பிஜேபி முயற்சி மேற்கொண்டது. அதிமுகவினரும் பேச்சு நடத்தினர். அதே நேரம், திமுகவும், தங்கள் பக்கம் வருமாறு பேச்சு நடத்தி வந்தது. ஆனால், தேமுதிக இன்னும் உறுதியான முடிவு எடுக்காமல் உள்ளது.
 
மூன்று சீட்டுதான் அதிகபட்சமாக தரமுடியும்னு அதிமுக சொல்லி விட்டது. பாஜக கொடுத்த தொடர் வலியுறுத்தலில் தொடர்ந்த பேச்சு வார்த்தையால், மருத்துவ கல்லூரிக்கு ஒப்புதல், பிரேமலதாவுக்கு ராஜ்யசபா சீட் , தேர்தல் செலவுத் தொகை என டிமாண்டுகள் தொடர்ந்தன. ராஜ்யசபா சீட்டுக்கு எடப்பாடி கடும் மறுப்பு தெரிவித்தார். அந்தக் கோபத்தில்தான் 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்கும் வேலையை ஆரம்பித்தார் தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த் . 

இந்த நிலையில், யாரிடமும் கெஞ்ச வேண்டாம். நாம் தனித்துப் போட்டியிடுவோம். நாம் வாங்கும் ஓட்டு 2 கட்சிகளையும் காலி செய்துவிடும் என விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ஆவேசம் காட்டி வருகிறார். தனித்துப் போட்டிங்கிறது தற்கொலைக்குச் சமம் எனக் கூட்டணிக்கு மல்லுக் கட்டுகிறார் சுதீஷ். என்ன முடிவெடுப்பதென தெரியாமல் தடுமாறுகிறார் பிரேமலதா என்று விவரிக்கிறார்கள் அதிமுகவினர்.

இதற்கிடையே, கடந்த 2016 தேர்தலில் மநகூ கட்சிகளுடன் இணைந்து நின்றே 2.4 சதவீத வாக்குகளைத்தான் வாங்கியிருக்கிறது தேமுதிக அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் அதிமுகவுக்கு பலனில்லை. அதனால் அவர்களை அழைக்க வேண்டாம் என அதிமுக தலைமைக்கு யோசனை தெரிவித்திருக்கிறதாம் பாமக.